Published : 05 Jan 2017 08:58 AM
Last Updated : 05 Jan 2017 08:58 AM

சிவக்குமார் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார், நேற்று முன்தினம் காரைக்கால் மாவட்டம் நிரவி பகுதியில் தான் கட்டி வரும் திருமண மண்டபத்தில் மர்ம நபர்களால் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் நேற்று முன்தினம் மாலை திருமலைராயன்பட்டினத்தில் உள்ள அவரது சொந்த வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு, சிவக்குமாரின் உட லுக்கு நேற்று புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் இரா.கமலக் கண்ணன், சமூக நலத்துறை அமைச்சர் எம்.கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலர் புருஷோத்தமன், அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப் பினர்கள் வையாபுரி மணிகண் டன், அசனா, அதிமுக மாவட்டச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவு மான எம்.வி.ஓமலிங்கம், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், நேற்று மாலை சிவக்குமாரின் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. திருமலைராயன்பட்டினம் சாணிப் பறவை சாலையில் உள்ள சுடு காட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிவக்குமாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப் பட்டது. சிவக்குமாரின் சிதைக்கு இரண்டாவது மகன் மனோகரன் தீ மூட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x