Published : 23 Jan 2015 10:23 AM
Last Updated : 23 Jan 2015 10:23 AM

சிறுநீரகம் செயலிழந்தவர்கள் சுயமாக டயாலிசிஸ் செய்வது சிறந்தது: சிறுநீரக நிபுணர் ராஜன் ரவிச்சந்திரன் தகவல்

சிறுநீரகம் செயலிழந்தவர்கள் சுயமாக டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) செய்துகொள்வது சிறந்தது என சிறுநீரக நிபுணர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சேப்பியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் சார்பில் சுயமாக டயாலிசிஸ் (Peritoneal Dialysis PD) செய்துகொள்வது குறித்த விழிப்புணர்வு மற்றும் வசதி இல்லாதவர்களுக்கு உதவி செய்வது தொடர்பான நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது. பவுண்டேஷன் தலைவரும் சிறுநீரக நிபுணருமான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டிசிஎஸ் நிறுவனத்தின் மனித ஆற்றல் மேம்பாட்டு அதிகாரி கணேசன், திரைப்பட நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் பேசியதாவது:

சிறுநீரகம் செயலிழந்தவர்கள் மருத்துவமனையில் சென்று டயாலிசிஸ் செய்துகொள்கின்றனர். இதுபோல செய்யும்போது உடலில் பல்வேறு பாதிப்புகளும், நோய்களும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தேவையான பொருட்களை நாமே வாங்கி வந்து டயாலிசிஸ் செய்யும்போது, எவ்வித பிரச்சினையும் இல்லை. இதற்கு ஒரு மாதத்துக்கு ரூ.20 ஆயிரம் செலவாகும். சுயமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் முறை மிகவும் சிறந்தது. வசதியில்லாதவர்கள் எங்களுடைய பவுண்டேஷனை அணுகினால் உதவி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x