Published : 03 Jul 2017 08:15 AM
Last Updated : 03 Jul 2017 08:15 AM

சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி என இரண்டாகப் பிரித்து ஜிஎஸ்டியை வகைப்படுத்துவது ஏன்?

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) நாடு முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் அமலாகியுள்ளது. கலால், சுங்கம், மதிப்புக்கூட்டு, விற்பனை, சேவை என பல்வேறு வரிகள் தனித்தனியாக இருந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் இந்த ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சில், பொருளுக்கு தகுந்தபடி 5 முதல் 28 சதவீதம் வரை வரியை விதித்துள்ளது. மாநில வரிவிதிப்பு முற்றிலும் தவிர்க்கப் பட்டு, மத்திய அரசுக்கு முழுமையாக வரி செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜி எஸ்டி), மாநிலங்களுக்கு இடையி லான ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) என்ற முறையில் பிரித்து வரி விதிக் கப்படுகிறது. குறிப்பாக ஒரு பொருளுக்கு 18 சதவீதம் வரி என் றால், அதில் 9 சதவீதம் சிஜிஎஸ்டி, 9 சதவீதம் எஸ்ஜிஎஸ்டி என பிரித்து வகைப்படுத்தப்படுகிறது. அதேபோல, ஒரு பொருள் மாநிலம் விட்டு மாநிலம் சென்றால் ஐஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

இது தொடர்பாக வணிகவரித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி என வரி விதிப்பு இருந்தாலும், ஒட்டுமொத்த வரியையும் பெறு வது மத்திய அரசுதான். அதன்பின், அவர்கள் வைத்துள்ள ‘பார்முலா’ அடிப்படையில் வரியை மாநில அரசுக்கு வழங்குவதாகக் கூறு கின்றனர். இது நடைமுறைக்கு வந்த பிறகுதான் மாநிலங்களுக்கான பங்கு என்ன என்பது தெரியவரும். இப்போதைக்கு மொத்த ஜிஎஸ்டி வரியில் மத்திய, மாநில ஜிஎஸ்டிக்கு தலா 50 சதவீதம் என்ற அளவில் பிரித்து பில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

மறு விற்பனைக்கு வரி உண்டா?

ஏற்கெனவே ஜிஎஸ்டி விதிக் கப்பட்ட ஒரு பொருளை வாங்கி, மறு விற்பனை செய்யும் போதும் வரி செலுத்த வேண்டும் என்கின்றனர் வணிகவரித் துறையினர்.

இது தொடர்பாக வணிகவரித் துறை அதிகாரி கூறும்போது, ‘‘தற்போது மதிப்புக்கூட்டு வரிக்கும், ஜிஎஸ்டிக்கும் வித்தியாசம் இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும் பொருளுக்கு முதல் விற்பனையாளர் 28 சதவீத அடிப் படையில் ரூ.280 வரியுடன் வழங்குவார். அதை வாங்குபவர், அந்தப் பொருளுக்கு ரூ.1,100 விலை நிர்ணயித்து, அதற்கு 28 சதவீத வரி நிர்ணயித்து விற்பார். ஆனால், அவர் ஏற்கெனவே பொருள் வாங்கியதன் அடிப்படையில் ரூ.28 மட்டும் மேல் வரி செலுத்துவார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x