Published : 08 Nov 2016 09:10 AM
Last Updated : 08 Nov 2016 09:10 AM

சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு பரிந்துரை: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க ஆலோசனை - உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவ ரைத் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவர மத் திய அரசுக்கு பரிந்துரைத்துள்ள தாக சென்னை உயர் நீதிமன்றத் தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கரூர் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், திருச்சி ஸ்ரீரங்கம் வழக்கறிஞர் பி.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அரவக் குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனுக் களை நிராகரிக்க வேண்டும். அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்கள் ஒதுக்கக்கூடாது’ என கோரியிருந் தனர். இந்த மனு மீதான விசாரணை ஏற்கெனவே தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோரை கொண்ட முதல் அமர்வில் விசா ரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எதிர்மனு தாரர்கள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணை யம் சார்பில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டாலே சின்னங்களை ஒதுக்கு வது உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளும் தொடங்கிவிடும். அதி்ல் வேறு யாரும் தலையிட முடியாது. எனவே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்களுக்கு அங்கீ கரிக்கப்பட்ட கட்சிகளின் தேர்தல் சின்னங்களை ஒதுக்கக்கூடாது என யாரும் தடை கோர முடியாது.

தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324-ன் கீழ் பணப்புழக்கத்தைத் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது. அதன்படி வாக்காளர்களுக்குத் பணம் கொடுப்பதை முற்றிலுமாக தடுத்து வருகிறோம்.

சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும். தேர்தல் செலவு கணக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் அவர்கள் கண்டிப் பாக தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக செலவு செய்கிறார்களா என்பதைக் கண் காணிக்க கூடுதல் குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

கடந்த மே மாதம் நடந்த தேர்தலின்போதே அரவக்குறிச்சி யில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. 6,612 வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. இதில் 1,179 வழக்குகள் வாக்காளர்களுக்குத் பணம் கொடுத்ததாக பதியப்பட்டவை.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப் பதற்காக ஏற்கெனவே நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தண்டனை சட்டப்பிரிவின் கீழ் ஒரு வேட்பாளர் குறைந்தது 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றாலே அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. 6 ஆண்டு களுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என சட்ட விதிகள் உள்ளன. தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுபவர் களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அது போல குற்றப்பின்னணி கொண்ட ஒரு வேட்பாளரின் தண்டனை உத்தரவுக்காக காத்திருக்காமல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டாலே அவரைத் தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்யும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டுவரவும் மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத் துள்ளது.

இந்தச் சூழலில் மனுதாரர்கள் கோரியுள்ளதுபோல தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யாமல் இருக்க முடியாது. அது சட்டப் படியும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x