Published : 22 Mar 2017 07:20 AM
Last Updated : 22 Mar 2017 07:20 AM

சசிகலா - ஓபிஎஸ் அணிகளிடையே மோதல்: இரட்டை இலை சின்னம் யாருக்கு? - தேர்தல் ஆணையம் இன்று விசாரணை

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணிகளிடம் தேர்தல் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது.

தமிழக முதல்வராக வும், அதிமுக பொதுச்செயலாள ராகவும் இருந்த ஜெயலலி தாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கடந்த மாதம் தேர்தல் ஆணையத் திடம் புகார் அளித்தனர்.

தமிழக முதல்வராக வும், அதிமுக பொதுச்செயலாள ராகவும் இருந்த ஜெயலலி தாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கடந்த மாதம் தேர்தல் ஆணையத் திடம் புகார் அளித்தனர்.

இப்புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா சார்பில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் அளித்தார். அதை ஏற்காத ஆணையம், சசிகலாவே பதிலளிக்க வேண்டும் என கூறியது. அதன்பின், சசிகலா சார்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த விளக்கம் தொடர்பாக ஓபிஎஸ் அணியின் கருத்தை தேர்தல் ஆணையம் கேட்டுப் பெற்றது. அப்போதுதான், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அணியினர் கோரிக்கை வைத்தனர். அதன்பின், சசிகலா அணி சார்பில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் சிலர் தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு விளக்கத்துடன், இரட்டை இலை சின்னம் தங்களுக்குதான் சொந்தம் என கோரி மனு அளித்தனர்.

இது தொடர்பாக இரு தரப்பினரும் தங்கள் விளக்கங்களை கடிதம் மூலம் 21-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். அதன்பின், 22-ம் தேதி (இன்று) ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன்படி, சசிகலா அணியின் சார்பில் அதிமுக வழக்கறிஞர்கள் இன்று ஆணையத்தில் ஆஜராக உள்ளதாக, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் தரப்பில் எம்.பி., மைத்ரேயன், முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.

அதிமுக விதிகள் படிதான் பொதுச் செயலாளர் நியமனம் நடந்துள்ளது என்றும் சசிகலாவுக்கு அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு, 37 எம்.பி.க்கள், 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்படும்.

அதேநேரத்தில் அதிமுக சட்ட விதிகள்படி சசிகலா நியமிக்கப்பட வில்லை என்பதை ஓபிஎஸ் அணியினர் மீண்டும் வலியுறுத்துவர். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (23-ம் தேதி) முடிவதால், இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் இரு தரப்பும் தீவிர மாக உள்ளன. எனவே, இரு தரப்பின் கருத்துகளை கேட்டபின் தேர்தல் ஆணையர்கள் இறுதி முடிவை இன்று அல்லது நாளை வெளியிட வாய்ப்புள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x