Published : 26 Jan 2015 01:22 PM
Last Updated : 26 Jan 2015 01:22 PM

கோடை காலத்தில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் ஒரே சீரான மின்வெட்டு அமலாகுமா? - மின் வாரியத்துக்கு கால அவகாசம்

கோடை காலத்தில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஒரே விதமான மின் தடையை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க முடியாமல் மின் வாரிய அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். அதனால், இதுகுறித்த மனுக்களின் விசாரணையை ஒத்திவைத்துள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் வாரியம் பதிலளிக்க உத்தர விட்டுள்ளது.

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு நேரங்களில், சென்னைக்கும், மற்ற மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு விதமான மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் பெரும்பாலும் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதில்லை, சில நேரங்களில் ஒரு மணி நேர மின்வெட்டு மட்டும் அமலாகிறது. அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

வடகிழக்குப் பருவ மழை மற்றும் குளிர்காலம் காரணமாக சமீப காலங்களில் மின்சாரத் தேவை குறைந்து மின்வெட்டு அமலாகவில்லை. ஆனால் பிப்ரவரி முதல் கோடைகாலம் ஆரம்பமாக உள்ளதால் மின்சாரத் தேவை அதிகரிக்கும். மேலும் காற்றாலை மற்றும் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறையும். இதனால், மின்வெட்டை அமல்படுத்த வேண்டியிருக்கும்.

இதன் அடிப்படையில், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் வணிகப்பிரிவு தலைமைப் பொறியாளர் சார்பில், ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், தற்போது மின் வாரியம் அமல்படுத்தி வரும் மின் கட்டுப்பாடு முறை தொடருவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் கோவை சிறு, குறு தொழில்கள் சங்கமான கொடீசியா ஆகியவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளன. சென்னைக்கு மட்டும் ஒரு வகையான மின் வெட்டு, மற்ற நகரங்களுக்கு ஒரு வகை மின்வெட்டு, கிராமங்களுக்கு மற்றொரு வகை என்ற பாரபட்சமான மின் வெட்டு முறையை மாற்றி, ஒரே சீராக மின்வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று இதில் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கடந்த வாரம் விசாரணை நடந்துள்ளது. அப்போது தமிழக மின் வாரிய அதிகாரிகளின் நிலை குறித்து ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அக்‌ஷய்குமார் மற்றும் உறுப்பினர் ராஜகோபால் ஆகியோர் விளக்கம் கேட்டனர்.

இதுகுறித்து பதிலளிக்க அவர் கள் கால அவகாசம் கேட் டனர். இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு, மின் வாரியம் பதிலளிக்க கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலத்தின் தலைநகராக சென்னை இருப்பதால், அரசுத் துறை தலைமை அலுவல கங்கள், வெளிநாட்டுத் தூதர கங்கள், வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் என பல முக்கிய அலுவலகங்கள் இங்கு உள்ளன. எனவே, தற்போது சீரான மின் வெட்டு குறித்து எந்த முடிவையும்எடுக்க முடியவில்லை. மேலும் கோடை காலம் வந்த பின்பே சூழ்நிலை கருதி முடிவெடுக்க முடியும். எனவே, ஒழுங்குமுறை ஆணையத்திடம் கால அவகாசம் பெற்று, நிலைமையை தொடர்ந்து கண் காணித்து வருகிறோம். புதிய மின் திட்டப் பணிகளையும் விரைவுபடுத்தியுள்ளோம்.

தட்டுப்பாடு ஏற்பட்டால் ஒழுங்குமுறை ஆணைய ஆலோ சனைப்படி முடிவெடுப்போம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x