Published : 08 Nov 2016 09:17 AM
Last Updated : 08 Nov 2016 09:17 AM

குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்து நவம்பர் 30-க்குள் அனுப்ப வேண்டும்: ரேசன் கடை ஊழியர்களுக்கு உணவுத்துறை உத்தரவு

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர் களின் விவரங்களை நவம்பர் 30-ம் தேதிக்குள் சேகரித்து அனுப்ப வேண்டும் என நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறைகள் சார்பில் 34 ஆயிரத்து 686 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள் உட்பட 2 கோடியே 3 லட்சத்து 386 குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் தற்போது புழக் கத்தில் உள்ள குடும்ப அட்டை கள் 2009-ம் ஆண்டே காலாவதி யாகிவிட்டதால், உள்தாள் ஒட்டப் பட்டு புதுப்பிக்கப்பட்டு வந் துள்ளது. இந்த அட்டைகளுக்கு பதில் தற்போது மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது. இதற்காக பொது விநியோகத் திட்டத்தில் ஆதார் எண் உள்ளடக் கிய கணினி தொகுப்பு விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற் காக விற்பனை முனைய இயந்திரம் (பாயின்ட் ஆப் சேல்) அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில், குடும்ப அட்டை விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் கடந்த மாதம் முதல் நடந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், மாவட்ட, வட்டார வழங்கல் அதிகாரி கள், உதவி ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை உணவுத் துறை அனுப்பியுள்ளது. அதில், பாயின்ட் ஆப் சேல் இயந்திரத் தில் குடும்ப உறுப்பினர் எண் ணிக்கைக்கும், குடும்ப அட்டை யில் உள்ள உறுப்பினர் எண் ணிக்கைக்கும் இடையில் வேறு பாடு உள்ளது. எனவே, குடும்ப அட்டையில் சரியான குடும்ப நபர்களின் எண்ணிக்கையை, குடும்ப அட்டைதாரர்களிடம் பெறுவதுடன், இறந்த, இடம் பெயர்ந்த உறுப்பினர்களின் பெயர்களை நீக்க நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். குடும்ப அட்டை உறுப்பினர் விவரங்களை நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

குழப்பம் ஏன்?

குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர் விவரம், ஆதார் இணைப்பு எண்ணிக்கையிலும் ஏற்பட்ட குழப்பத்துக்கு, கடைகளில் குடும்பத் தலைவரின் ஆதார் விவரங்களை மட்டும் இணைத்ததுதான் காரணம் என தெரியவந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரது விவரமும் இணைக்கப்பட வேண்டும் என்பதை தெரிந்த சிலர், கைபேசி செயலி மற்றும் நியாயவிலைக் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்களிலும் விவரங்களை ஸ்கேன் செய்து இணைத்துள்ளனர்.

இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘இந்த சுற்றறிக்கைக்கும், பொதுமக்கள் ஆதார் இணைப்புக்கும் சம்பந்தமில்லை. இந்த சுற்றறிக்கை கடை ஊழியர்களுக்கானது. அவர்கள் குடும்ப தலைவரிடம், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் விவரங்களை பெற்று, வட்டார வழங்கல், உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் துறைக்கு அனுப்ப வேண்டும். பொதுமக்களை பொறுத்தவரை, விரைவாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் எண் விவரங்களை இணைக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x