Published : 16 Sep 2016 08:27 AM
Last Updated : 16 Sep 2016 08:27 AM

காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு, மறியல்

பெட்ரோல் பங்க், 21 லட்சம் கடைகள் மூடல்; பாதுகாப்புடன் அரசு பஸ்களை இயக்க முடிவு

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப் பட்டதை கண்டித்தும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 21 லட்சம் கடைகள், 4,000 பெட்ரோல் பங்க்குகள் மூடப் படுகின்றன. தனியார் பேருந்துகள், லாரி, வேன், ஆட்டோக்கள் இயங் காது. திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் வன்முறை வெடித்தது. பெங்களூரு உட்பட பல இடங்களிலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நூற்றுக் கணக்கான வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் கண்மூடித்தனமாக தாக்கப் பட்டனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் 16-ம் தேதி (இன்று) முழு அடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட் டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்தனர். இப்போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, மதிமுக, பாமக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையடுத்து, தமிழகம் முழு வதும் வெள்ளிக்கிழமை (இன்று) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை சில்லறை வணிக நிறுவ னங்கள், கடைகள், சுய தொழில் நிறுவனங்கள், பெட்டிக்கடைகள், நடைபாதை கடைகள் அடைக்கப் படும். கோயம்பேடு உட்பட தமிழ கத்தின் அனைத்து காய்கறி, பழம், பூ சந்தைகள், மீன், கறிக்கடைகள் செயல்படாது. தமிழகம் முழுவதும் 21 லட்சம் கடைகள் அடைக்கப்படும். 3 லட்சம் லாரிகள், 55 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது. பால் நிலையங்கள் காலை 9 முதல் மாலை 5 வரை இயங்கும். மருந்துக் கடைகள் காலை 6 முதல் மதியம் 12 வரை இயங்கும்.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தமிழ்நாடு நெல், அரிசி, வணிக சம்மேளனம், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு ஹோட்டல்கள், உணவு விடுதிகள், ஸ்வீட் , பேக்கரி கூட்டமைப்பு, பெட்ரோலிய வணிகர்கள் சங்கம், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு டிரான்ஸ்போர்ட் சங்கம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் உட்பட ஏராளனமான அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தில் பங்கேற்குமாறு கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நேற்று 1 லட்சம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தேமுதிக சார்பில் உண்ணா விரத போராட்டமும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரயில் மறியல் போராட்டமும் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழர் தேசிய முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை யிடப் போவதாக அறிவித்துள்ளன.

தனியார் பேருந்துகள் ஓடாது

தனியார் பேருந்துகள் இயங்காது என்று பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அரசுப் பேருந் துகள் இயங்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். திமுகவின் தொமுச உட்பட பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசுப் பேருந்துகள் வழக்கமான எண்ணிக்கையில் இயக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ரயில் சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர். வேன், ஆட்டோக்கள் இயங்காது.

பள்ளிகளுக்கு முழு பாதுகாப்பு

அரசுப் பள்ளிகள் இயங்கும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித் துள்ளது. தனியார் பள்ளி அமைப் புகள் விடுமுறை அறிவித்துள்ளன. இன்று இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

பெட்ரோல் பங்க்குகள் மூடப்படு வதாக பெட்ரோலிய விற்பனையா ளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஹைதர் அலி கூறியுள்ளார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 4,500 பங்க்குகளில், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான 197 பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல திறந்திருக்கும். இந்த பங்க்குகள் பற்றிய விவரங்களை இணைய தளத்தில் (www.iocl.com/download/ TNCOCODetails.pdf) தெரிந்துகொள் ளலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்துக்கு சென்னை ஹோட்டல்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கம் இதில் பங்கேற்கவில்லை. டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும்.

படப்பிடிப்பு, காட்சிகள் ரத்து

தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள், இயக்குநர்கள், தென்னிந் திய நடிகர் சங்கம், பெப்சி, திரை யரங்க உரிமையாளர்கள், விநியோ கஸ்தர்கள், சின்னத்திரை கலை ஞர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு திரைத்துறை அமைப்பு களும் போராட்டத்தில் பங்கேற்ப தாக அறிவித்துள்ளன. சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள், பாடல் பதிவு, டப்பிங், எடிட்டிங் உட்பட அனைத்து பணிகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளில் காலை, மதியக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.

90 ஆயிரம் போலீஸார்

மாநிலம் தழுவிய கடை யடைப்பு போராட்டம், ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதால், தமிழகம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய இடங்களில் அதிரடிப் படையினரும் பாதுகாப்பு பணி களை மேற்கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x