Published : 14 Aug 2015 02:11 PM
Last Updated : 14 Aug 2015 02:11 PM

காவல்துறையில் 13 அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதக்கம்

இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 13 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

பதக்கம் பெறுவோர் விவரம்:

1. கொ.பழனிசாமி,

துணை காவல் கண்காணிப்பாளர்,

குற்றப் பிரிவு குற்ற புலனாய்வுத் துறை, கோவை மாவட்டம்.



2. ஆ.பிலிப் பிராங்களின் கென்னடி,

காவல் ஆய்வாளர்,

போடி தாலுகா காவல் நிலையம், தேனி மாவட்டம்.



3. ஆ. முரளி,

காவல் ஆய்வாளர்,

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை,

மெட்ரோ பிரிவு, சென்னை.



4. கே. சந்திரசேகரன்,

காவல் ஆய்வாளர்,

T-12 பூந்தமல்லி காவல் நிலையம்,

பெருநகர் சென்னை காவல்.



5.ஏ. நடேசன்,

காவல் ஆய்வாளர், மண்ணச்சநல்லூர் காவல் நிலையம்,

திருச்சி மாவட்டம்.



6. வி. சந்திரா,

காவல் ஆய்வாளர்,

தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்,

தஞ்சாவூர்.



7.முனைவர் தி. கண்ணன்,

காவல் ஆய்வாளர்,

கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு,

கிருஷ்ணகிரி.



8.ஆர். வெங்கட்ராமன்,

காவல் ஆய்வாளர், B-6 பீளமேடு குற்றப்பிரிவு காவல் நிலையம்,

கோவை மாநகர்.



9. பி. முருகானந்தம்,

காவல் ஆய்வாளர்,

அண்ணாமலை நகர் வட்டம் ,

கடலூர் மாவட்டம்.



10. பூ. மணிவேல்,

காவல் ஆய்வாளர்,

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை,

அரியலூர் மாவட்டம்.

இதே போன்று, பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

1. தி. பிரபாகரன்,

காவல் ஆய்வாளர்,

திண்டுக்கல் ‘கியூ’ பிரிவு.



2. எம் . தாமோதரன்,

காவல் ஆய்வாளர்,

சிறப்பு பிரிவு,

குற்றப் புலனாய்வுத் துறை, சென்னை.



3. ஆர்.செந்தில் குமார்,

முதல் நிலைக் காவலர் 1363,

பழையனூர் காவல் நிலையம்,

சிவகங்கை மாவட்டம்.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள்.

மேற்கண்ட விருதுகள் முதலமைச்சர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும்'' என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x