Published : 06 Jan 2015 09:26 AM
Last Updated : 06 Jan 2015 09:26 AM

காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் 64 லட்சம் வாக்காளர்கள்

புதிதாக வெளியிடப்பட்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த வாக்காளர் பட்டியலின்படி காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் 63,61,220 வாக்காளர்கள் உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரத்தில் புதிய வாக் காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே.க. சண்முகம் வெளியிட்டார். அதன்படி, காஞ்சி புரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 16,87,626 ஆண்கள், 16,87,037 பெண்கள், 174 இதரர் என மொத்தம் 33,74,837 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிதாக பெயர் சேர்க்க 68,776 ஆண்கள், 70,357 பெண்கள், 50 இதரர் என மொத்தம் 1,39,183 பேர் விண்ணப்பித்ததில், பல் வேறு குறைபாடு காரணமாக 14,390 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, எஞ்சிய 59,054 ஆண்கள், 65,659 பெண்கள், 50 இதரர் என மொத்தம் 1,24,793 வாக்காளர்கள் புதிதாக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே பெயர் இருந்து, அவர்களில் இறந்தவர்கள், உரிய முகவரியில் வசிக்காதவர்கள் என 4,391 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடி மையங்கள், வாக் காளர் பதிவு அலுவலர் மற்றும் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் வட்டாரங் கள் கூறும்போது, ‘புதிதாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில், அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5,28,214 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக செய்யூர் (தனி) தொகுதியில் 2,03,179 வாக்காளர்கள் உள்ளனர்.

புதிதாக பெயர் சேர்க்கப் பட்டுள்ள வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜன. 21-ம் தேதியன்று வண்ண வாக்காளர் அட்டை வழங்கப் படும். வாக்காளர் பட்டியல் விவரங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அதற்குரிய படிவத்தை பெற்று, நிறைவு செய்து மீண்டும் அங்கேயே ஒப்படைக்க வேண்டும்’ என்றனர்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளின் மறு பதிப்பு செய் யப்பட்ட மூலப் பட்டியல் மற்றும் துணை வாக்காளர் பட்டியல்-1, 2, 3, 4 ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வீரராகவ ராவ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பட்டியல்களை வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர் களிடம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: தற்போது வெளியிடப்பட்டுள்ள மறு பதிப்பு செய்யப்பட்ட மூல பட்டியல் மற்றும் துணை வாக்காளர் பட்டியல்-1, 2, 3,4 ஆகியவற்றின் படி, மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதி களில் வாக்காளர்களின் எண்ணிக்கை 29,86,383. இதில், 14,99,228 ஆண் வாக்காளர்களும் 14,86,649 பெண் வாக்காளர்களும், 506 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த பட்டியல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட் சியர் அலுவலகங்கள், மாவட்டத் தில் உள்ள சென்னை மாநகராட்சி யின் மண்டல அலுவலகங்கள், திருவள்ளூர், ஆவடி நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக் கப்பட்ட வாக்குச்சாவடி மையங் களான 1,100 பள்ளிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலின் ஒவ் வொரு பாகத்துக்கும் நியமிக் கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடமும், சம்பந்தப்பட்ட பாகத்தின், மறு பதிப்பு செய்யப்பட்ட மூல பட்டியல் மற்றும் துணை வாக்காளர் பட்டியல்கள் உள்ளன. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஜனவரி 1, 2015 அன்று 18 வயது பூர்த்தி செய்தவர்கள், பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், வாக்காளர் பெயர் சேர்க்க விரும்புவோர், நீக்கம், திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் ஆஜராகி, உரிய படிவங்கள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x