Published : 09 Jul 2017 10:27 AM
Last Updated : 09 Jul 2017 10:27 AM

களவுபோன பொருட்களை மீட்பதில் முதலிடம்: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகமிக குறைவு - முதல்வர் கே.பழனிசாமி தகவல்

களவுபோன பொருட்களை மீட் பதில் தமிழகம் தேசிய அளவில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலி டத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் குறைந்துள்ளது என்று முதல்வர் கே.பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:

அரசு ஒரு திட்டத்தை செயல் படுத்தும்போது, அதில் உள்ள நிறைகள் தெரிந்தாலும் அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடுமோ என்ற குறுகிய மனப்பாங்குடன் சிறிய குறைகளையும் பூதாகரமாக்கி அறிக்கை, பேட்டி அளிப்பது, போராட்டங்கள் நடத்துவது சிலரது அன்றாட வழக்கம். அரசுக்கு சங்கடம் ஏற்படுத்தும் ஒரே நோக்கில், தினமும் டிவி, பத்திரிகைகளில் செய்தி வந்தால் போதும் என்ற அளவில் இந்த நட வடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

காவல் துறையினர் எடுத்து வரும் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளால், தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக குற்ற நிகழ்வுகள் குறைந்து வருகின்றன. கொலை வழக்குகள் உட்பட சொத்து சம்பந்தமாக 2010-ம் ஆண்டு 23,068 வழக்குகள் தாக்கலாகி உள்ளன. 2016-ல் 20,055 வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

இதன்மூலம், கொலை மற்றும் சொத்து சம்பந்தமான குற்றங்கள் குறைந்து வருவது தெளிவா கிறது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சொத்து சம்பந்தமான குற்றங்களில் தமிழகத்தின் குற்ற விகிதம் 26.4 ஆகும். இது தேசிய சராசரி அளவான 40.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 14 புள்ளிகள் குறைவாக உள்ளது.

தேசிய அளவில் முதலிடம்

தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தின்படி களவு போன சொத்துக்களை மீட்டதில் 2013, 2014, 2015 ஆகிய 3 ஆண்டுகளிலும் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக பெண்களுக்கெதிரான குற்றங் களின் மீது அதிக கவனம் செலுத் தப்பட்டு வருகிறது. அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப் படுகின்றன. இதனால், பெண் களுக்கெதிரான குற்றங்கள் குறைந்து வருகின்றன.

கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் வரதட்சணை கொலை, மானபங்கம், பாலியல் கொடுமை, பலாத்காரம் என 14,707 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. 2011 முதல் 2016 வரை 6 ஆண்டுகளில் 16,364 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 2,941 வழக்குகளும், இந்த ஆட்சியில் சராசரியாக 2,727 வழக்குகளும் தாக்கலாகி யுள்ளன.

மாநிலத்தில் தடை செய்யப் பட்ட அடிப்படைவாத இயக்கங் களின் செயல்பாடுகளை காவல் துறையினர் கூர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றனர்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x