Published : 03 Jul 2017 08:35 AM
Last Updated : 03 Jul 2017 08:35 AM

கல்பாக்கத்தில் அதிவேக அணு உலை நடப்பாண்டில் பயன்பாட்டுக்கு வரும்: இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் தகவல்

நவீன தொழில்நுட்பத்தில் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக அணு உலை நடப்பாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.கே.பாதுரி தெரிவித்துள்ளார்.

வர்த்தக ரீதியிலான அதிவேக அணு உலையைப் பொருத்தவரை ரஷ்யாவில் மட்டும் ஒரே ஒரு அணு உலை தற்போது செயல்பட்டு வருகிறது.

இதேபோன்று, அதிவேக அணு உலை தொழில்நுட்பத்தை பயன் படுத்த ஜப்பான், பிரான்சு ஆகிய நாடுகள் முயன்றன. இருப்பினும், அவற்றை பாதுகாப்பாக கையாள் வதில் ஏற்பட்ட தோல்வியால் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.

இந்நிலையில், சர்வதேச அணு சக்தி முகமை சார்பில் அணுசக்தி தொடர்பான மாநாடு ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 700 அணு விஞ்ஞானிகள் கலந்துகொண்டனர்.

அதில் பங்கேற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் (ஐஏஇஏ) இயக்குநர் ஜெனரல், யுகியா அமனோ பேசுகையில், “அதிவேக அணு உலைகள், பழைய அணு உலைகளைக் காட்டிலும் 70 சதவீத ஆற்றலை அளிக்கக்கூடியவை. மேலும், பாதுகாப்பானவை. பழைய அணு உலைகளைவிட பல மடங்கு அணு கழிவுகள் அதிவேக அணு உலைகள் மூலம் குறைக்கப்படு கிறது” என்றார்.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.கே.பாதுரி பேசும் போது, “தற்போதுள்ள அணு உலை களை விட அதிவேக அணு உலைகள் மிகவும் பாதுகாப் பானவை. கல்பாக்கத்தில் அமைக் கப்பட்டு வரும் வர்த்தகரீதியான இந்தியாவின் முதல் அதிவேக அணுஉலையை நடப்பாண்டி லேயே பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக அணு உலை (பிஎஃப்பிஆர்) மற்றும் ரஷ்யாவின் அதிவேக அணு உலை ஆகியவை இயற்பியலின் அடிப்படைத் தத்துவத்தை கொண்டு இயங்கினாலும், இந்திய அணு உலை தனித்துவமானது என அணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x