Published : 07 Dec 2016 08:53 AM
Last Updated : 07 Dec 2016 08:53 AM

கர்நாடக மாநிலம் முழுவதும் அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக மாநிலம் முழுவதும் அதிமுகவி னரும், தமிழ் அமைப்பினரும் நேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன் னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் இரங் கல் தெரிவித்தனர்.

அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவையின் தலைவர் மீனாட்சி சுந்தரம், பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தி.கோ. தாமோதரன், மைசூரு தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் புக ழேந்தி உள்ளிட்ட தமிழ் அமைப் புகளின் பிரதிநிதிகளும் இரங் கல் தெரிவித்தனர்.

பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயல், சிக்கம களூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தமிழ் அமைப்புகளிலும் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ் சலி செலுத்தப்பட்டது. கர் நாடகாவில் உள்ள அதிமுக வினர் சார்பாகவும், எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் சார் பாகவும் பெங்களூருவில் ராமப்புரம், அல்சூர், மார்க் கெட் உள்ளிட்டப் பகுதி களில் அஞ்சலி செலுத்தப்பட் டது. பெங்களூரு மார்க்கெட் பகுதியில் தனியாருக்கு சொந்த மான அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிமுகவினரும், பெண்களும் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கோலார் தங்கவயல், மைசூரு, மண்டியா, ஷிமோகா உள்ளிட்ட இடங்களிலும் அதிமுகவினர் ஜெயலலிதா வுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பலத்த பாதுகாப்பு

இதற்கிடையே, ஜெய லலிதா மறைவைத் தொடர்ந்து, பெங்களூரு மாநகரில் தமி ழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் 25 கம்பெனி மத்திய ரிசர்வ் மற்றும் பாது காப்பு படையினர் குவிக்கப் பட்டுள்ளனர். அல்சூர், சிவாஜிநகர், விவேக் நகர், லிங்கராஜாபுரம், ராமபுரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கும், வர்த்தக இடங்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்த ராமையாவின் வீடு, அமைச் சர்களின் வீடுகள், கன்னட அமைப்புகளின் தலைவர்களின் வீடுகள் ஆகியவற்றின் முன்பும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

ஜெயலலிதா மீதான‌ சொத் துக்குவிப்பு வழக்கில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் ஆச்சார் யாவின் வீட்டுக்கும், ராம்நகரில் உள்ள திமுக தலைவர் கரு ணாநிதியின் மகள் செல்வி வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தமிழ் அமைப்பு களின் சார்பாக ஜெயலலிதா வுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x