Published : 16 Sep 2016 09:27 AM
Last Updated : 16 Sep 2016 09:27 AM

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்: நாம் தமிழர் பேரணியில் இளைஞர் தீக்குளித்து பரிதாப மரணம் - ரயில் மறியலுக்கு முயன்றவர்கள் கைது

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

காவிரி நதிநீர் பங்கீடு வி வகாரத்தில் கர்நாடகத்தில் தமி ழர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து சிந்தாதிரிப் பேட்டை வரை நேற்று பேரணி நடை பெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக் குநர்கள் அமீர், சேரன், ரவி மரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சித் தொண்டரான திருவாரூரை சேர்ந்த விக்னேஷ்குமார்(23) என்ப வரும் பங்கேற்றார்.

புதுப்பேட்டை அருகே பேரணி வந்தபோது விக்னேஷ்குமார் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்த கட்சியினர் உடனடியாக தண்ணீரை ஊற்றியும், இலை கள் மற்றும் அட்டைகளை பயன் படுத்தியும் தீயை அணைத்தனர். பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். உடலில் பெரும்பாலான இடங்கள் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

செய்தியாளர்களிடம் சீமான் கூறும்போது, "தமிழர்கள் தாக்கப் படுவது கண்டனத்துக்குரியது. தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படு கிறது. தீக்குளிப்பை நாம் தமிழர் கட்சி ஊக்கப்படுத்தவில்லை. பேர ணியின்போது தீக்குளிப்பு நடந்தது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு. அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும்" என்றார்.

முன்னதாக பேரணியில் பங் கேற்க வந்த நாம் தமிழர் கட்சி யினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் வந்தபோது, சாலையில் சென்ற கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு காரை தாக்கி சேதப் படுத்தினர். சென்னை அண்ணா சாலையில் மத்திய அரசின் இந்தியன் ஆயில் தலைமை அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிலர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மீது கற்கள் மற்றும் உருட்டுக் கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் அலுவலக கண் ணாடிகள் உடைந்து நொறுங்கின. மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வீசினர். அதில், “கர்நாடகத்தில் தமி ழர்கள் தாக்கப்பட்டதுக்கு மத்திய அரசும் காரணம். தமிழர்களுக்கு எதிராக போட்டி போட்டு கன்ன டர்களை தூண்டிவிட்டது தேசிய கட்சிகளான பாரதிய ஜனதாவும், காங்கிரஸும் தான். தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமான மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்” என்று அச்சிடப் பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேனாம் பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக் கப்பட்டதை கண்டித்து சென்ட் ரல் ரயில் நிலையத்தில் சிவசேனா கட்சியினர் நேற்று காலையில் ரயில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி சுமார் 40 பேரை கைது செய்தனர். இதேபோல கோடம் பாக்கம் ரயில் நிலையத்தில் மறியலுக்கு முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

விக்னேஷ்குமார் டிப்ளமோ படித்தவர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் மேல வீதியில் வசித்து வரும் பாண்டியன், கண்ணகி தம்பதியரின் மகன் விக்னேஷ் (23). இவர் டிப்ளமோ படிப்பு முடித்து சென்னை பாடியில் உள்ள தனியார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனத் தில் பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் கட்சியின் மன்னார் குடி நகர இளைஞர் பாசறை செயலாளர் பதவியில் உள்ளார். மன்னார்குடிக்கு 3 மாதங்க ளுக்கு முன்பு வந்து சென்றார். சென்னையிலேயே தங்கி வேலை செய்துவரும் நிலையில் நாம் தமிழர் கட்சி அறிவித்த போராட்டத்தில் கலந்து கொண்டார். இவருக்கு ஜனனி என்ற மூத்த சகோதரி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x