Published : 30 Dec 2016 08:52 AM
Last Updated : 30 Dec 2016 08:52 AM

கரும்புக்கான ஆதார விலையை ரூ.4,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும்: வைகோ, ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கரும்புக்கான ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று அவர்கள் தனித்தனியே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வைகோ:

2016-17 நடப்பு கரும்பு பருவத்திற்குக் கரும்பு கொள்முதல் விலையை கடந்த ஆண்டு விலையிலேயே தமிழக அரசு நிர்ணயித்திருப்பது கரும்பு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித் துள்ளது. பருவமழை பொய்த்தது, நிலத் தடி நீர் குறைந்தது, இடுபொருள்கள் விலை உயர்வு, விவசாயத்திற்கான ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனாலும், கரும்பு விவசாயிகள், தொடரும் வேதனைகளை எதிர்கொண்டு கரும்பு உற்பத்தி செய்து வருகின்றனர்.

எனவே, தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்குள் கரும்பு விவசாயிக ளுக்குச் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள் முதல் விலையை மாற்றி அமைத்து, டன் ஒன்றுக்கு ரூ.4000-ஆக நிர்ணயம் செய்து கரும்பு உற்பத்தியில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியைத் தடுக்க வேண்டும்.

ஜி.கே.வாசன்:

கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2,850 வழங்கு வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல. எனவே, தமிழக அரசு கரும்பு விவசாயத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை கவனத்தில் கொண்டு டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆதார விலையாக உயர்த்தி தர வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எனவே, தமிழக அரசு கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மத்திய அரசு கரும்புக்கான ஆதாரவிலை யாக டன் ஒன்றுக்கு ரூ.2,300 என அறி வித்துள்ளது. மாநில அரசு பரிந்துரை விலையாக வாகன வாடகையையும் சேர்த்து ரூ.550 அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வே.துரைமாணிக்கம்:

கடந்த ஆண்டு அறிவித்த விலையே இந்த ஆண்டும் அறிவித்திருப்பது விவசாயி களையும், கரும்பு உற்பத்தியையும் பாது காக்க உதவிகரமாக இருக்காது. எனவே, கரும்புக்கான விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 என்று உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x