Published : 22 Mar 2017 07:49 AM
Last Updated : 22 Mar 2017 07:49 AM

கட்சியையும் ஆட்சியையும் தன்வசம் வைத்திருக்கும் சசிகலா தரப்புக்கே இரட்டை இலை சின்னம்: இரட்டை இலையை அடையாளம் காட்டிய திண்டுக்கல் மாயத்தேவர் கருத்து

இரட்டை சிலை சின்னம் சசிகலா அணிக்கா, ஓ.பி.எஸ்., அணிக்கா என்பது குறித்து இன்று டெல்லியில் இரு தரப்பையும் அழைத்து இறுதி விசாரணை நடத்துகிறது இந்திய தேர்தல் ஆணையம். இந்த நிலையில், இரட்டை இலை அதிமுக-வின் வெற்றிச் சின்னமாக வந்த விதம் குறித்து பேசினார் 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக-வின் முதல் வேட்பாளரும் வழக்கறிஞருமான மாயத்தேவர்.

‘‘1973- திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் களத்தில் புதிய கட்சி என் பதால் வேட்பாளரான என்னிடம் ஏணி, விளக்கு உள்ளிட்ட பதினாறு சின்னங்களை காட்டி ‘இதில் ஒன்றை உங்களது சின்ன மாக தேர்வு செய்யுங்கள்’ என்றார்கள். நன்கு யோசித்துவிட்டு, நான்தான் இரட்டை இலையைத் தேர்வு செய்தேன்.

‘எதற்காக இலையைத் தேர்வு செய்தீர் கள்?’ என்று தலைவர் எம்.ஜி.ஆர். கேட்டார். ‘மக்களிடம் சின்னத்தை கொண்டு சேர்ப் பதும், வரைவதும் எளிது. இரண்டாவது உலக யுத்தத்தில் பிரிட்டன் வெற்றி பெற்ற போது வெற்றியின் அடையாளமாக இரண்டு விரல்களை காட்டினார் வின் சென்ட் சர்ச்சில். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் இரட்டை இலையைத் தேர்வு செய்தேன்’ என்று நான் சொன்னதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.! அதைத் தொடர்ந்து அதையே கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக எம்.ஜி.ஆர். வைத்துக் கொண்டார்’’ என்று சொன்னார் மாயத்தேவர்.

‘‘இப்போது, இரட்டை இலை எங்களுக் குத்தான் என ஓ.பி.எஸ். தரப்பும், சசிகலா தரப்பும் மல்லுக் கட்டுகிறதே.. இவர்களில் யாருக்கு இரட்டை இலை சொந்தமாக வேண்டும்?’’ என்று அவரை கேட்டபோது,

‘‘மூன்று முறை தற்காலிக முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்துக்கே ஆசை விடாதபோது முப்பது வருடங்களாக ஜெய லலிதாவுக்கு பணிவிடை செய்து கொண் டிருந்த சசிகலாவுக்கு முதல்வராகும் ஆசை வருவதில் என்ன தவறு?

கஷ்டப்பட்டு எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சி இவர்களால் அழிந்துவிடுமோ என்று அஞ்சு கிறேன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலையே இல்லாமல் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. இரட்டை இலை இல்லாவிட்டால் எந்த அணியும் ஜெயிக்க முடியாது. இப்போதிருக்கிற நிலையில், கட்சியும் ஆட்சியும் சசிகலா தரப்பிடமே இருப்பதால் அவர்களுக்கு இரட்டை இலையை வழங்குவதுதான் நியாயம்’’ என்கிறார் மாயத்தேவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x