Published : 31 Jan 2017 09:03 AM
Last Updated : 31 Jan 2017 09:03 AM

கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி தீவிரம்

எண்ணூர் காமராஜர் துறை முகம் அருகே இரு கப்பல்கள் மோதிய விபத்தால் கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 28-ம் தேதி எம்.டி.பி.டபிள்யூ. மேப்பிள் மற்றும் எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற இரு கப்பல்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், எம்.டி.டான் காஞ்சி புரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டி யது. இதனால் எண்ணூர் கடல் பகுதியில் மீன்கள், ஆமைகள் உயிரிழந்தன.

இந்நிலையில், கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் இந்தியக் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடலோர காவல் படையின் மாசு அகற்றும் குழுவினர் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள் ளனர். மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எண்ணூர் துறைமுகம் மற்றும் உள்ளூர் மீனவர்களின் உதவி யுடன் இப்பணி நடந்து வருகிறது.

ஓரிரு நாளில் அகற்றம்

குறிப்பாக, எண்ணூர் ராம கிருஷ்ணா நகர் குப்பம் கடற்பகுதியில் ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவுக்கு இந்த எண்ணெய் படலம் படர்ந்துள்ளது. ஓரிரு நாட்களுக் குள் இந்த எண்ணெய் படலம் முற்றிலும் அகற்றப்படும் என கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கடல் நீரில் கச்சா எண்ணெய் கலந்திருப்பதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த எண்ணெய் படலத்தை அகற்ற துறைமுக நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x