Published : 16 Sep 2016 09:47 AM
Last Updated : 16 Sep 2016 09:47 AM

ஒரு லட்சம் மணல் லாரிகள் நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று நடைபெறும் வேலைநிறுத் தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மணல் லாரி களை இயக்காமல் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமை யாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற் றது. மாநிலத் தலைவர் செல்ல.ராஜாமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், “கர்நாடக மாநிலத் தில் நடைபெற்ற கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட லாரிகள், பேருந்துகளுக்கு இன் சூரன்ஸ் கம்பெனிகள் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு கர்நாடக அரசு நஷ்டஈடு வழங்காவிட்டால் சம்மேளனத்தின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

காவிரி விவகாரம் தொடர் பாக இன்று (16-ம் தேதி) நடை பெறும் வேலைநிறுத்தப் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் சுமார் 1 லட் சத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி களை இயக்காமல் நிறுத்தி வைக் கப்படும்” என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x