Published : 08 Nov 2016 09:11 AM
Last Updated : 08 Nov 2016 09:11 AM

‘எம்.எஸ்.சுப்புலட்சுமி 2016’ விருது: சென்னை மண்டல இறுதிச்சுற்றில் ஆர்.கார்த்திக் தேர்வு - தேசிய இறுதிப்போட்டியில் பங்கேற்கிறார்

‘எம்.எஸ்.சுப்புலட்சுமி 2016’ விரு துக்கான கர்னாடக இசைப் போட்டி யில் சென்னை மண்டல இறுதிச்சுற் றில் பாடகர் ஆர்.கார்த்திக் வெற்றி பெற்றார். இவர் தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்குத் தேர்வானார்.

கர்னாடக சங்கீத மேதையான மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவைப் போற்றும் வகையில், வளரும் கர்னாடக இசைக் கலைஞர் களுக்கு ஆண்டுதோறும் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி 2016’ விருது பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான கர்னாடக இசைப் போட்டிகளை ‘தி இந்து’ ‘சரிகம’ இணைந்து நடத்துகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்தவர் களுக்காக சென்னையிலும், கர் நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்காக பெங்களூருவிலும், கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்காக கொச்சி யிலும், ஆந்திரா, தெலங்கானா வைச் சேர்ந்தவர்களுக்காக ஹைதராபாத்திலும், வட மாநிலங் களைச் சேர்ந்தவர்களுக்காக மும்பையிலும் மண்டல அள விலான போட்டிகள் நடத்தப் பட்டன. இதில் மொத்தம் 150 பேர் பங்கேற்றனர். இவற்றில் சிறப்பாக பாடிய 26 பேர் மண்டல அள விலான இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை தவிர்த்த பிற மண்டலங்களில் இருந்து தேசிய அளவிலான இறுதிப் போட்டிக் காக 4 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ள நிலையில், சென்னை மண்டலத்துக்கான இறுதிச்சுற்று பாட்டுப் போட்டி மியூசிக் அகாடமி யில் கடந்த 6-ம் தேதி நடந்தது.

இதில் சி.சுவாதி, எஸ்.ஸ்ரீவத் ஸன், எஸ்.ஸ்ரீவர்ஷா, மதுரை என்.சிவகணேஷ், ஆர்.சாய் விக்னேஷ், ஆர்.கார்த்திக் ஆகி யோர் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிக்கு டாக்டர் கே.கிருஷ்ண குமார், எஸ்.ராஜேஸ்வரி, ராஜ்குமார் பாரதி ஆகியோர் நடுவர்களாக பங்கு வகித்தனர். 6 போட்டியாளர்களும் வரிசையாக பாடல்களைப் பாடினர். நிறைவில், ஆர்.கார்த்திக் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

தேசிய அளவிலான இறுதிப் போட்டி சென்னை மியூசிக் அகாடமியில் வரும் 13-ம் தேதி நடக்கவுள்ளது. இதில் ஆர்.கார்த்திக் பங்கேற்றுப் பாடவுள் ளார். இதற்கு முன்பு 2 முறை இறுதிப் போட்டிக்கு ஆர்.கார்த்திக் தேர்வானது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்குக் கோப்பை வழங்கப்படும். ‘சரிகம’ சார்பில் அவர்களது பாடல்களுடன் கூடிய இசை ஆல்பமும் இலவசமாக தயாரித்து வழங்கப்பட இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x