Published : 01 Jan 2017 08:35 PM
Last Updated : 01 Jan 2017 08:35 PM

உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு

மாநகராட்சிகள், நகராட்சிகள் உள் ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட் டுள்ளது.

தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை கோவை உட்பட 12 மாநகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றி யங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 1.30 லட்சத்துக்கும் அதிகமான பதவிகளுக்கான பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிந்தது.

இப்பதவிகளுக்கு புதியவர் களை தேர்வு செய்ய, தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால், தேர்தல் ரத்து செய்யப் பட்டது. டிசம்பர் 31-ம் தேதிக் குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டது. இதற்கிடையில், அக்டோ பர் 24-ம் தேதிக்குப் பின் உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் அவசர சட்டம் மூலம் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையில், டிசம்பர் 31-ம் தேதியுடன் தனி அதிகாரிகள் பதவிக்காலம் முடிவதாக தெரிவிக் கப்பட்டிருந்தது. ஆனால், உள் ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் வரை, தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை ஜூன் மாதம் வரை நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் ஊரகவளர்ச்சித் துறைகள் நீட்டித்து உத்தரவிட் டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன,

தேர்தல் எப்போது?

தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டாலும், தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டால், தனி அதிகாரிகள் பதவி அத்துடன் காலாவதியாகிவிடும்.

ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக தற்போது சசிகலா பொறுப்பேற்றுள்ளார். இதைத் தொடர்ந்த அரசியல் சூழல்களால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.

மேலும், உள்ளாட்சிப் பதவி களில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்தும் முயற்சியில் அரசு இறங்கும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x