Published : 23 May 2015 07:30 AM
Last Updated : 23 May 2015 07:30 AM

உருது ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு

கடந்த 2012-2013-ம் ஆண்டு காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் 2014-ம் ஆண்டு ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், அந்த ஆண்டுக்குரிய உருது ஆசிரியர் தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணிநியமன ஆணை பள்ளிக்கல்வித்துறை மூலமாக விரைவில் வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x