Published : 08 Nov 2016 03:12 PM
Last Updated : 08 Nov 2016 03:12 PM

உயிருடன் இருப்பவர் இறந்துவிட்டதாக வாரிசு சான்றிதழ் வழங்கல்: திண்டுக்கல் ஆட்சியரிடம் நேரில் முதியவர் புகார்

உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாகக் கூறி, வாரிசு சான்றிதழ் வழங்கிய வருவாய்த் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினருடன் வந்து திண்டு க்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திண்டுக்கல் தாலுகா டி.பஞ்சம்பட்டி அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன் அதிசயம் (67). உயிருடன் உள்ள இவரை 2007, நவ. 13-ல் இறந்துவிட்டதாகவும், இவருக்கு வாரிசாக இவரது மகன் ஜான்பீட்டர் என்பவர் உள்ளார் என்றும் 2012,அக். 9-ல் வருவாய்த்துறையினர் வாரிசு சான்றிதழ் வழங்கினர்.

இந்நிலையில், கடந்த மாதம் பட்டா மாறுதல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகம் சென்றபோது, அதிசயம் இறந்து விட்டதாகக் கூறி, வாரிசு சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தான் உயிருடன் இருப்பதற்கான இருப்பிட சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற அதிசயம், தனது மகன் ஜான்பீ ட்டருடன் நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, கழுத்தில் மாலையுடன் அதிசயம் பதாகை யை ஏந்தி வந்தார்.

அதிசயம், ஜான்பீட்டர் மற்றும் உறவினர்கள் ஆட்சியரை சந்தித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

இதுகுறித்து அதிசயம் கூறியதாவது: எனது தம்பியின் மகன் சுரேஷ்அருள்பிரசாத் தான் எனது சொத்துக்களை அபகரிக்க போலி சான்றிதழை தயாரிக்க காரணமாக இருந்துள்ளார். நான் இறந்துவிட்டதாகக் கூறி வாரிசு சான்றிதழ் வழங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மீதும், அதற்கு காரணமாக இருந்த சுரேஷ்அருள்பிரசாத் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x