Published : 23 May 2015 07:55 AM
Last Updated : 23 May 2015 07:55 AM

உணவு தானிய விரயம் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தகவல்

கடந்த ஓராண்டில் உணவு தானிய விரயம் முற்றிலும் குறைக்கப் பட்டுள்ளதாக மத்திய உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார்.

தஞ்சையில் இந்திய உணவுக் கழக (எஃப்.சி.ஐ.) அருங்காட்சி யகம் மற்றும் அலுவலகக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராம் விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியது:

நாட்டில் சேமிப்புக் கிடங்கு களில் உபரியாக உள்ள 50 லட்சம் டன் உணவு தானியங்களை சந்தைப்படுத்தவும், பழங்கள், காய்கறிகளை பிற மாநிலங்களில் தடையின்றி விற்பனை செய்யவும், கோதுமை, வெங்காயம், பயறு வகைகளை வரியின்றி இறக்குமதி செய்யவும், அரிசி, உளுந்து, துவரம்பருப்பு ஆகியவற்றை ஊக வணிகத்தில் ஈடுபடுத்த தடை விதிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்தகம் எழுதுவேன்

பல்வேறு பிரதமர்கள் தலை மையிலான அரசில் நான் அமைச்சராகப் பங்கேற்றுள்ளேன். பிரதமர் மோடியை பிறருடன் ஒப்பிட்டுப் பேசுவது இப்போது தேவையற்றது. நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், புத்தகம் எழுதும்போது இதுபற்றி குறிப்பிடுவேன்.

நான் அமைச்சராவதற்கு முன்னர், இந்திய உணவுக் கழக கிடங்குகளில் தானிய இழப்பு 2 சதவீதமாக இருந்தது. இது, மிகப்பெரிய இழப்பு. நவீன கிடங்குகள், முறையாகக் கையா ளுதல், இயந்திரமயமாக்குதல் ஆகியவற்றால் விரயம் 0.04 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

நவீன தானிய சேமிப்பு பெருங் குடுவைகள் (சைலோஸ்), புதிய தொழில்நுட்பங்கள், சிசிடிவி கண்காணிப்பு மூலம் இழப்புகள், முறைகேடுகள் தடுக்கப்படுகின் றன. பொது விநியோகத்தில் உள்ள குறைபாடுகளைக் களையவும் விரைவான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

1986-ல் கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 29-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் கொண் டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் ஏற்கெனவே இருக்கின்ற சட்ட விதிகளை நடைமுறைப் படுத்துவதே எங்களது முதல் பணி என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x