Published : 01 Aug 2015 09:53 AM
Last Updated : 01 Aug 2015 09:53 AM

இலவச தொழிற்பயிற்சிக்கு ஏழை குடும்பப் பெண்கள் பதிவு செய்யலாம்

ஏழை குடும்பத் தலைவிகளுக்கு அரசு இலவச தொழிற்பயிற்சி அளிக்கவுள்ளது. இதில் பங்கு பெற விரும்புவோர் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் சென்னை மாவட்டத்தில், மகளிரை குடும்பத்தலைவியாக கொண்டுள்ள ஏழை குடும்பங்கள் கண்டறியப்படும். அந்த குடும்பங்களில் 18 – 45 வயது வரையிலான குடும்பத்தலைவி அல்லது அவர்களின் திருமணமாகாத மகள் அல்லது மகனுக்கு, அரசு மற்றும் அரசு பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் தையற் பயிற்சி, சில்லரை வணிகம், நோயாளிகள் பராமரிப்பு, அழகுக்கலை, கணினிப் பயிற்சி, மின்பொருட்கள் பழுது பயிற்சி, தோல் பொருட்கள் தயாரிப்பு, இலகுவகை வாகனங்கள் ஓட்டுதல், செயற்கை ஆபரணங்கள் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் அரசு செலவில் அளிக்கப்பட உள்ளன.

இவை ஒரு மாதம் முதல் பன்னிரெண்டு மாதம் வரை வழங்கப் படும். இது வேலைவாய்ப்புடனான தொழிற்பயிற்சி என்பதால், அவர் களின் வாழ்வாதாரம் மேம்பட வழி செய்யும்.

20-ம் தேதி வரை பதியலாம்

எனவே, சென்னையில் மகளிரை குடும்பத்தலைவியாக கொண்டவர்கள் (குறிப்பாக கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, ஆதரவற்றோர், வறுமைக் கோட் டுக்கு கீழ் உள்ளோர்) ஆகஸ்ட் 3 முதல் 20-ம் தேதி வரை, வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றுகளுடன் பதிவுக்கு அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்வதற்கும் தகவல்கள் பெறவும் தொடர்பு கொள்ள வேண் டிய முகவரி : திட்ட அலுவலர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலகு, முதல் மாடி, 100, அண்ணா சாலை (ஸ்பிக் கட்டிடம் அருகில்) கிண்டி, சென்னை – 32. தொலைபேசி – 2235 0636, கைபேசி – 9445034102/104/105. மின்னஞ்சல்- dpiu_chn@yahoo.com.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x