Published : 22 Mar 2017 07:39 AM
Last Updated : 22 Mar 2017 07:39 AM

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே ஒதுக்கப்படும்: அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை

‘‘இரட்டை இலை சின்னம் எங்க ளுக்கே கிடைக்கும். ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவது நான்தான்’’ என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத் தில், நேற்று கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் துணை பொதுச்செய லாளர் டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர். அப்போது, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ, ஏ.கே.டி.ராஜா தன் ஆதரவாளர்களுடன், தினகரனை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து, பத்திரிகை யாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது:

அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவது நான்தான். 23-ம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறேன்’’ என்றார்.

அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த தாவது:

தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பான புகார் உள்ள நிலையில், எப்படி நீங்கள் உறுதியாக கூறுகிறீர் கள்?

கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 95 சதவீதம், 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள், 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பெரும்பான்மையாக 90- 95 சதவீதம் பேர் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர். இதைத்தான், 22-ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் தெரிவித்து வெற்றி பெறுவோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படும்.

நடக்கும் சம்பவங்கள் தொடர்பாக சசிகலா என்ன நினைக்கிறார்?

தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது நன்றாக அவருக்கு தெரியும். அவர் அளித்த படிவம் ஏ,பி ஆகியவற்றை கொண்டுதான், நான் மனுத்தாக்கல் செய்கிறேன். ஏப்ரல் 12-ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் நான் வெற்றி பெறுவேன்.

அதிமுக தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?

இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் மண்ணின் மைந்தன் என்பதால் நான் வெற்றி பெறுவேன் என்கிறாரே?

நான் பாகிஸ்தானில் இருந்து வரவில்லை. நானும் இந்த மண்ணின் மைந்தன்தான். சென்னையைச் சேர்ந்தவன்தான். அதிமுக வேட்பாளராகிய என்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளதே?

நான் இரட்டை இலை சின்னத்தில் அந்த தொகுதியில் போட்டியிடுவேன்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

முன்னதாக, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் கட்சி நிர்வாகிகள் தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x