Published : 06 Oct 2016 07:49 AM
Last Updated : 06 Oct 2016 07:49 AM

இந்து இயக்க நிர்வாகிகள் கொலை: மத்திய அரசு தலையிட ராம.கோபாலன் கோரிக்கை

இந்து இயக்க நிர்வாகிகள் கொலையில் குற்றவாளிகளைக் கண்டறிய மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

வேலூரில் தொடங்கி திண்டுக்கல், கோவை, திருப்பூர், சென்னை என இந்து இயக்க நிர்வாகிகள் மீதான தாக்குதல் நீண்டுகொண்டே செல்கிறது. நேற்று (அக். 4) சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் நரஹரி தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதகள் நடத்தப்பட்ட விதத்திலிருந்து அவை திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது தெளிவாகிறது.

மதவாத அரசியல் பேசு பவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்து இயக்க நிர்வாகிகள் கொல்லப்படுவதை கண்டிப்பதில்லை. வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொல்லப்பட்டபோது போலி குற்றவாளிகளை கொண்டு வராமல், உண்மையான குற்ற வாளிகளை பிடித்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற காவல் துறையினர் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆனால், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையல் காவல்துறை செயல்படுவது துரதிருஷ்டவசமானது.

காவல் துறைக்கு..

தற்போது நடக்கும் நிகழ்வு களை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வது சாத்தி யமல்ல. எனவே, அமைச் சர்கள் இதனை காவல் துறை யினருக்கு அறிவுறுத்த வேண்டும். இல்லையெனில், இப்பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மக்கள் பொறுமை இழந்தால் சட்டம் - ஒழுங்கு கெடும் என்பதை அரசு உணர வேண்டும்.

இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x