இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக இரா.முத்தரசன் தேர்வு

Coimbatore 28/02/2015: R. Mutharasan, who was the Agriculture Wing Secretary of the party was elected on Saturday as the Secretary of the State Unit of the Communist Party of India. Photo:HANDOUT E-MAIL.

Published : 28 Feb 2015 21:30 IST
Updated : 28 Feb 2015 21:30 IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு கோவையில் நடந்தது. இதில் மாநிலச் செயலாளராக முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பதவிக்கு இரா.முத்தரசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சி.மகேந்திரன் போட்டியிட்டார். இதில் இரா.முத்தரசன் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தா.பாண்டியன் இரா.முத்தரசனை மாநில செயலாளராக முன்மொழிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் வழிமொழிந்தார்.

இரா.முத்தரசன் கட்சி அலுவலக உதவியாளராக இருந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் , தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More In
This article is closed for comments.
Please Email the Editor