Published : 08 Nov 2016 08:09 AM
Last Updated : 08 Nov 2016 08:09 AM

இந்தியாவில் தொழிலாளர் இயக்கங்கள் உருவாக ரஷ்ய புரட்சியே காரணம்: பிரகாஷ் காரத் பெருமிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் காரத் கலந்து கொண்டு பேசிய தாவது:

1917-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யாவில் நடந்த புரட்சி ஜார் மன்னரின் ஆட்சியை தூக்கியெறிய மட்டும் நடைபெறவில்லை. சுரண்டப்படும் வர்க்கத்தினரும் புரட்சி செய்ய முடியும், அரசு அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என நிரூபித்துக் காட்டியது.

மனித குலத்தில் புதிய அத்தியாயத்தை ஏற் படுத்தியது ரஷ்ய புரட்சி. ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த அந்த புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித் தது. இந்தியாவில் தொழிலாளர்கள் இயக்கங் கள் உருவாவதற்கு ரஷ்ய புரட்சியே காரணம்.

புரட்சி நடைபெற்று 74 ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் யூனியன் சிதறுண்டபோது, சோஷலிசம் முடிவுக்கு வந்ததாக கருதினார்கள். ஆனால், சோஷலிசம் எனும் சித்தாந்தத்துக்கு ஒருபோதும் முடிவு இல்லை. அதை நாம் இன்றள வும் பல நாடுகளில் நடைபெறும் போராட்டங்கள் மூலம் கண்டு வருகிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு:

உலக முழுவதும் புரட்சிகள் நடைபெற நவம்பர் புரட்சி காரணமாக இருந்தது. அந்தப் புரட்சிக்குப் பிறகுதான் உல கின் பல நாடுகள் விடுதலை பெற்றன. சோவி யத் யூனியன் இல்லையென்றால் இந்தியாவில் தொழில் வளர்ச்சியும் இருந்து இருக்காது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா:

ஏகாதிபத்தியத்தை ஒழிக்க தொழி லாளர்களின் ஒன்றுபட்ட இயக்கத்தால்தான் முடியும். எனவே, மேற்கு வங்கம், கேரளத்தைப் போன்று தமிழ்நாட்டிலும் இடதுசாரி இயக்கங் கள் வலுப்பெற போராட வேண்டும். இதற்காக சோஷலிசத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனை வரும் ஒன்றிணைய வேண்டும்.

மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

உலக வரலாற்றின் போக்கையே மாற்றியது ரஷ்ய புரட்சி. உழைப்பாளிகள் பெற்றுள்ள உரிமைகளின் பின்புலமாக சோவியத் யூனியன் உள்ளதை யாரும் மறுக்க இயலாது என்றார்.

இந்த விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ் ணன், திரைப்பட இயக்குனர் ராஜு முருகன், கல்வியாளர் வசந்திதேவி, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x