Published : 30 Dec 2016 10:13 AM
Last Updated : 30 Dec 2016 10:13 AM

இஎஸ்ஐ திட்டத்தில் தொழிலாளர்களை சேர்க்க புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள தொழி லாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இஎஸ்ஐ கழகம் “ஸ்பிரீ” (Scheme for promoting Registration of Employees and Employers-SPREE) என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 20 முதல் 2017 மார்ச் 31-ம் தேதி வரை நடப்பில் இருக்கும். ஏதே னும் காரணத்துக்காக இதுவரை இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் பதிவுசெய் யப்படாத அனைத்து தொழிலாளர் களுக்கும் சமூகப் பாதுகாப்பு பலன்கள் கிடைக்க வசதியாக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட காலக்கெடு வில் பதிவு செய்யும் தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்தோ அல்லது தாங் கள் குறிப்பிடும் தேதியில் இருந்தோ இஎஸ்ஐ சட்டத்தின்கீழ் வருவதாக கருதப்படும். அதேபோல், புதிதாக பதிவு செய்யப்பட்ட தொழிலாளர் களும் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து இஎஸ்இ சட்டத்தின்கீழ் வருவதாக கருதப்படுவர். 2016 டிசம்பர் 20-க்கு முன்னர் இஎஸ்ஐ சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நட வடிக்கைகளை இந்த புதிய திட் டம் கட்டுப்படுத்தாது.

தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பணிபுரி யும் தொழிலாளர்களைப் பதிவு செய்ய இந்த சிறப்பு திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இஎஸ்ஐ கழகம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x