Published : 22 Mar 2017 07:51 AM
Last Updated : 22 Mar 2017 07:51 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

சென்னையில் நேற்று செய்தியாளர் களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழன் தொலைக்காட்சி நிறு வனர் கா.கலைக்கோட்டுதயம் மெழுகு வர்த்திகள் சின்னத்தில் போட்டியிடு கிறார்’’ என்றார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி தின கரன் (அதிமுக), என்.மருதுகணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (ஓபிஎஸ் அணி), ஜெ.தீபா (எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை), கங்கை அமரன் (பாஜக), மதிவாணன் (தேமுதிக), ஆர்.லோக நாதன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x