Published : 01 Aug 2015 10:20 AM
Last Updated : 01 Aug 2015 10:20 AM

ஆடிப்பூரம் திருவிழா: மேல்மருவத்தூரில் 10 ரயில்கள் நிற்கும்

ஆடிப்பூரம் திருவிழாவை ஒட்டி வைகை, பாண்டியன் உள்ளிட்ட 10 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவதை ஒட்டி வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை மூன்று நாட்கள் பின்வரும் விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் நின்று செல்லும். இதன்படி, சென்னை எழும்பூர்-மதுரை வைகை விரைவு ரயில் (வண்டி எண்.12635), சென்னை எழும்பூர்-மன்னார் குடி மன்னை விரைவு ரயில் (16179), சென்னை எழும்பூர்-செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12661), சென்னை எழும்பூர்-திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விரைவு ரயில் (16177), சென்னை எழும்பூர்-மதுரை பாண்டியன் விரைவு ரயில் (12637), மதுரை-சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636), மன்னார்குடி-சென்னை எழும்பூர் சென்னை விரைவு ரயில் (16180), செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் (12662), திருச்சிராப்பள்ளி-சென்னை எழும்பூர் மலைக்கோட்டை விரைவு ரயில் (16178), மதுரை-சென்னை எழும்பூர் பாண்டியன் விரைவு ரயில் (12638) ஆகியவை மேல்மருவத்தூரில் நின்று செல்லும். இவ்வாறு செய் திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x