Published : 16 May 2016 08:13 AM
Last Updated : 16 May 2016 08:13 AM

அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் தள்ளிவைப்பு: அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

அதிக அளவிலான பணப் புழக்கம் காரணமாக அரவக்கு றிச்சி தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

அரவக்குறிச்சி தொகுதியில் அளவுக்கு அதிகமாக பண விநியோகம் இருப்பதாகக் கூறி அத்தொகுதியின் வாக்குப்ப திவை தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துள்ளது. தமிழகத் தில் பண விநியோகம் அதிக அளவில் நடைபெற்றதை தேர்தல் ஆணையமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது என்பதைத் தவிர இந்த நடவடிக்கையால் எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை.

ஓட்டுக்கு பணம் தந்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் தின் 123-வது பிரிவின்படியும், இந்திய தண்டனைச் சட்டம் 171(பி) பிரிவின்படியும் ஓராண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக, திமுக வேட் பாளர்கள் மீது இந்த சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு மீதமுள்ளவர்களைக் கொண்டு தேர்தல் நடத்துவதுதான் சரியாக இருக்கும். அரவக்குறிச்சி மட்டு மல்ல, 234 தொகுதிகளிலும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளனர். எனவே, 234 தொகுதிகளி லும் தேர்தலை தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டும். வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். அத்துடன் தொகுதி தேர்தல் அதிகாரிகளாக வெளிமாநில அதிகாரிகளை நியமித்து முழுக்க முழுக்க துணை ராணுவப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்தி நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத் துள்ள அறிக்கையில், ‘‘அரவக் குறிச்சி தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. அங்கு தேர்தலை சில நாட்கள் தள்ளி வைப்பது மட்டும் இதற்கு தீர்வா காது. ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என வலியு றுத்தியுள்ளார்.

17 அல்லது 18-ல் தேர்தல்

வாக்கு எண்ணிக்கை தொடங் குவதற்கு முன்பாக, அரவக்குறிச்சி தொகுதியில் வரும் 17 அல்லது 18-ம் தேதி தேர்தலை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதிக்கு அவர்கள் நேற்று தனித் தனியாக அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுகவும் திமுகவும் வாக்கா ளர்களுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அந்தத் தொகுதியின் வாக்குப்ப திவை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. இங்கு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா சார்பில் மதிமுக வேட்பாளர் கலையரசன் போட்டியிடுகிறார்.

வரும் 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அரவக்குறிச்சி தொகு தியில் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட் டுள்ளது. 19-ம் தேதி வெளியா கும் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சி பெரும்பான்மை பெறுகி றதோ, அந்தக் கட்சிக்கு ஆதர வாகவே அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்கள் வாக்கு அளிக்கும் மனநிலையை உருவாக்கி விடும். எங்கள் கூட்டணி பெரும்பான்மை பெற்றாலும் இதே நிலைமைதான் ஏற்படும். இது ஜனநாயகத்தின் அடிப்படைக்கு எதிரானது.

எனவே, வாக்கு எண் ணிக்கைக்கு முன்பாக வரும் 17 அல்லது 18-ம் தேதி அரவக் குறிச்சியில் வாக்குப்பதிவை நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜி (அதிமுக), கே.சி.பழனிச் சாமி (திமுக), ஜி .கலையரசன் (மதிமுக), எம். பாஸ்கரன் (பாமக), சி.எஸ்.பிரபு (இந்திய ஜன நாயக கட்சி), ஜி .அரவிந்த் (நாம் தமிழர் கட்சி) உட்பட 36 பேர் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x