Published : 09 Jul 2017 09:20 AM
Last Updated : 09 Jul 2017 09:20 AM

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்துகள் அறிமுகம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதி யுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசும்போது அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்:

அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பொதுமக்களுக்கு தற்போது கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்படுகிறது. இனி, இந்தப் பயிற்சி மையங்களில் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்படும். எதிர்காலத்தில் திறமையான ஓட்டுநர்கள் உருவாக இது வழிவகுக்கும். தனியார் பள்ளி, கல்லூரி பேருந்து களின் ஓட்டுநர்களுக்கு இங்கு கட்டணத்துடன் கூடிய புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் பேட்டரியில் இயங்கும் பேருந்துகள் அறிமுகப்படுத் தப்படும். இதனால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் புகை முற்றிலும் தவிர்க்கப்படுவதோடு, உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றம் தமிழ கத்தில் நடைமுறைக்கு வரும்.

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான பணிமனைகளில் தகுதியான இடங்களில் வங்கிகளின் ஒப்புதலோடு அவர்களின் நிதி மூலம் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு ஏடிஎம் மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்படும். போக்குவரத்துக் கழகங்க ளுக்கு சொந்தமான இடங் களில் வணிக நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசு போக்குவரத்துக் கழக குளிர் சாதன பேருந்துகளில் வை-பை இணையதள வசதி ஏற்படுத்தப்படும். அனைத்து போக்குவரத்துக் கழகங் களிலும் பணமில்லா பரிவர்த்தனை படிப்படியாக நடைமுறைப்படுத் தப்படும். அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் படிப்படியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் குளிர்சாதனப் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் மூலம் கழிப்பறை களுடன் கூடிய 2 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் கழிப்பறை வசதிகளுடன் கூடிய பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக் கப்படும்.

போக்குவரத்துத் துறை யில் 9 இணை ஆணை யர்களும், 11 துணை ஆணையர்களும் நிர்வாக ஆணையரின் கட்டுப் பாட்டின் கீழ்பணிபுரிந்து வருகின்றனர். கூடுதலாக ஒரு போக்குவரத்து ஆணையர் பணியிடம் உருவாக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x