Published : 16 Sep 2016 08:59 AM
Last Updated : 16 Sep 2016 08:59 AM

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

ஆளுங்கட்சி ஆதரவாளர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நியமனங்கள் தொடர் பான ஆவணங்களை 3 வாரங்க ளில் தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வி.வசந்தகுமார், ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகம் மற்றும் புதுவையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சியின் வழக்கறிஞர் அணி மற்றும் அவரது ஆதரவாளர்களே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப் படுகின்றனர். அரசு வழக்கறிஞர் பதவி என்பது அரசியல் பதவி கிடையாது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் பதவியில் தொடங்கி மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர்கள் வரை அனைவரும் ஆளுங்கட்சியினரின் சிபாரிசு பெற்றவர்களாகவே உள்ளனர். அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்யும்போது நேர்மை யான, தகுதியான, திறமையான, அனுபவசாலிகளை வெளிப் படையான முறையில் தேர்வு செய்ய வேண்டும் என பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்த உத்தரவுகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. ஆகவே தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்” என அதில் கோரியி ருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘‘வழக்கறிஞரின் பணி அனுபவம், தகுதி, திறமை ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் அரசு வழக்கறிஞர்களை நியமிக்கிறோம். உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இது தொடர் பாக தமிழக அரசுக்கு எந்த வொரு உத்தரவையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. அரசு வழக்கறிஞர் நியமனம் தொழில் அனுபவத்தின் அடிப் படையில்தான் நடக்கிறது தவிர, அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் அடிப்படையில் அல்ல. அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்கள் போன்ற பதவிகளை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்று தான் நியமிக்கி றோம்” என அதில் கூறப்பட்டு இருந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் வி.வசந்தகுமார், ‘‘உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள உத்தரவுகளைப் பின்பற்றி தான் கர்நாடகா மற்றும் கேரளாவில் அரசு வழக்கறிஞர்களின் நியமனம் வெளிப்படையாகவும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் இந்த நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை” என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘மாவட்ட நீதிபதிகளின் நியமனத் தில் கூட வெளிப்படையாகவும், திறமையானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் தேர்வுக்குழுவை அமைத்து நீதித்துறை செயல்படுகிறது. அதுபோல திறமையானவர்கள், தகுதியானவர்கள் அரசு வழக்கறி ஞர்களாக நியமிக்கப்பட்டால்தான் அரசு இயந்திரம் சிறப்பாக இயங்க முடியும். ஆனால் வெளிப் படையான நியமனங்கள் தற்போது இல்லை. எனவே நாங்கள் இந்த வழக்கை 2 விதமாக பிரித்து உத்தரவிடுகிறோம். இனிமேல் நடக்கும் எந்த அரசு வழக்கறிஞர் நியமனமும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள சட்ட விதிகளைப் பின்பற்றி மாநில அரசு தயாரிக்கும் வரைவு விதிகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். அதுபோல தற்போது நியமிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு உட்பட்டது. மேலும், எந்த நடை முறைகளைப் பின்பற்றி இந்த நியமனங்கள் நடைபெற்றன என்பது தொடர்பாகவும், பிற மாநிலங்களில் உள்ள நடை முறைகள் குறித்தும் உரிய ஆவணங்களை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x