Published : 29 Nov 2014 09:51 AM
Last Updated : 29 Nov 2014 09:51 AM

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 610 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 610 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் விழாவுக்கு தலைமை தாங்கினார். துணைவேந்தர் ஜே.எஸ்.என்.மூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் ஆகியோர் மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவ, மாணவிகள் 295 பேருக்கு பட்டங்களை வழங்கினர். இவற்றில் 69 மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கங்களுடன் பட்டங்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

தமிழக அரசு சுகாதாரத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை இடங்கள் 610 அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x