Published : 22 Mar 2017 08:10 AM
Last Updated : 22 Mar 2017 08:10 AM

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஆர்எஸ்எஸ் வரவேற்பு

கோவை எட்டிமடை அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில பாரத பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நேற்று நிறைவடைந்தது. அதன் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ்ஜோஷி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நாடு முழுவதும் இருந்து 1400 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டு நிறைவை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே, அகில பாரத செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா, தென்னிந்தியத் தலைவர் வன்னியராஜன் ஆகி யோர் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர். தத்தாத்ரேயா ஹொசபலே கூறியதாவது:

ஆர்எஸ்எஸ் சாகாக்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தில் இருந்து, 57 ஆயிரமாக உயர்ந்துள் ளது. மேற்குவங்கத்தில் சட்டவிரோதிகள் ஊடு ருவல் அதிகரித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்ஐஏ) எச்சரித்துள்ளது. இந்த பிரச்சினையால் அங்கு வாழும் இந்துக்களின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளது. எனவே மேற்கு வங்க அரசு இப்பிரச்சினை குறித்து விரைவான நடவடிக்கை எடுத்து, இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இந்து மக்களுக்கான சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீண்டாமையை ஒழிக்க, கோயில், கிணறு, மயானம் உள்ளிட்டவற்றில் ஜாதி வேறுபாட்டைக் களைய ஆர்எஸ்எஸ் வலியுறுத்துகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரும் அமர்ந்து பேசி முடிவெடுக்கு மாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதில், ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தொடர்பில்லை என்றாலும் வரவேற்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். குற்றச்சாட்டுகள் கூறப்பட் டாலும் பல முறை அவரை மக்கள் தேர்வு செய்துள்ளனர். யோகி ஆதித்யநாத் சரியான தேர்வுதான்.

தமிழகத்தில் தேசிய அளவிலான கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, இங்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு வலுவடைந்து வருவது தெரிகிறது. தென் தமிழகத்தில் சாகாக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுவருவதால் மக்களிடம் எளிதில் சென்றடைவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x