Published : 18 Jan 2017 08:45 AM
Last Updated : 18 Jan 2017 08:45 AM

அனகாபுத்தூரில் பெண்கள் பள்ளி அமைக்க வலியுறுத்தல்: 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கும் பெற்றோர்

அனகாபுத்தூரில் செயல்படும் இருபாலர் பள்ளியில் சில மாணவர் களின் தொந்தரவு காரணமாக, மாணவிகள் பலர் பள்ளிக்கு வரத் தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால், தனியாக மாணவிகளுக் கான அரசு பள்ளியை அமைக்கு மாறு பொதுமக்கள், பெற்றோர் வலியுறுத்துகின்றனர். இந்த 20 ஆண்டு கோரிக்கை எப்போது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதியினர் உள்ளனர்.

அனகாபுத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளி 5 ஏக்கரில் 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 848 மாணவிகள், 1058 மாணவர்கள் என 1,906 பேர் படிக்கின்றனர். பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார், திருநீர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். அரசு பொது தேர்வுகளில் இப்பள்ளி நல்ல தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ளது. மாநில, மாவட்ட அளவிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகளை கேலி, கிண்டல் செய்வது, பாடம் நடத்தவிடாமல் ஆசிரியர்களைத் தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் மாணவர்கள் சிலர் ஈடுபடுவதால், பல மாணவிகள் பள்ளி செல்லத் தயங்குகின்றனர். பள்ளிக்குச் செல்லாமல் வெளியில் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து, தேர்வு எழுத மட்டும் பள்ளிக்குச் செல்கின்றனர். இதனால் இப்பகுதி மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. தற்கொலை சம்பவங்களும் நடந்துள்ளதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் அனகாபுத்தூரில் பெண்களுக்கான அரசு பள்ளியை அமைக்குமாறு 20 ஆண்டுகாலமாக கோரி வருகின்றனர். இது தொடர்பாக பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர். தனியாக பெண்கள் பள்ளியை அமைத்தால், அதிக அளவிலான மாணவிகள் பள்ளியில் சேர்வார்கள். கல்வித் தரமும் மேம்படும் என்கின்றனர். இதுகுறித்து பல தரப்பினரும் கூறியதாவது:

பெற்றோர் கோ.ராஜேந்திரன்:

வறுமை காரணமாக உள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் பிள்ளை களைப் படிக்க வைக்கிறோம். ஆனால், வகுப்பறையில் மாணவி களைப் படிக்கவிடாமல் செய்வது, பின்தொடர்ந்து சென்று கேலி, கிண்டல் செய்வது, செல்போன் எண் கேட்டு கட்டாயப்படுத்துவது போன்ற அநாகரிகமான செயல்களில் சில மாணவர்கள் ஈடுபடுகின்றனர். உச்சகட்டமாக கையைப் பிடித்து இழுப்பது போன்ற எல்லை மீறிய செயல் களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்த, தனியாக பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக ஆர்வலர் ர.ரமேஷ் பாபு:

சில மாணவர்கள் செய்யும் சேட்டைகளால், பெண் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்வ தையே மாணவிகள் தவிர்க்கின் றனர். பெற்றோரும் புகார் கொடுக்கத் தயங்குவதால், தொல்லை தருவோர் எல்லை மீறுகின்றனர். மாணவிகளுக்கு தனியாக பள்ளியை தொடங்குவதே இதற்கு தீர்வு.

பள்ளி ஆசிரியர்:

வகுப்பறை யில் பாடம் நடத்தவிடாமல் சில மாணவர்கள் தொல்லை கொடுக்கின்றனர். ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர் களை பலமுறை எச்சரித்தும், பெற்றோரிடம் புகார் கொடுத்தும் தீர்வு ஏற்படவில்லை. இதனால் மாணவிகளின் கல்வி பாதிக்கப் படுவது உண்மைதான். பெண்க ளுக்கு என தனி பள்ளி அமைத் தால்தான் இப்பிரச்சினை தீரும். பெற்றோரும் இதையே வலியுறுத் துகின்றனர். கல்வித்துறைதான் இதற்கு தீர்வு காண வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x