Published : 07 Jan 2017 08:56 AM
Last Updated : 07 Jan 2017 08:56 AM

அந்நிய செலாவணி மோசடி: டிடிவி தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் - உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை விதித்த ரூ. 28 கோடி அபராதம் சரியானதுதான் எனக்கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று தள்ளுபடி செய்தது.

அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி.தினகரன். முன்னாள் எம்.பி.யான இவர் கடந்த 1995- 96-ம் ஆண்டு காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலர் அங்கீகாரமற்ற முகவர் மூலமாக பெற்றதாக அமலாக்கத்துறை யினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 1998-ம் ஆண்டு டிடிவி. தினகரனுக்கு மத்திய அமலாக்கத்துறை ரூ. 31 கோடி அபராதம் விதித்தது.இதை எதிர்த்து டிடிவி.தினகரன், மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை பரிசீலித்த மேல் முறையீட்டு ஆணையம், ரூ. 31 கோடி அபராதத்தை ரூ. 28 கோடி யாக குறைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து டிடிவி. தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவு விவரம் வருமாறு:

டிடிவி தினகரன் காபிபோசா சட்டத்தில் கைதானபோது தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிலும், அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போதும் தன்னை இந்தியர் எனக் குறிப்பிட்டுள் ளார்.

ஆனால் அந்நிய செலாவணி மோசடி தொடர்பான இந்த வழக்கில் தன்னை சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என மாறுபட்ட வாக்கு மூலம் அளித்துள்ளார்.

உண்மையில், அவரது கணக் குக்கு வந்துள்ள பெரும் தொகை அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூல மாகப் பெறப்படவில்லை. அதேபோல இந்தப் பணம் இங்கி லாந்தில் உள்ள நிறுவனத்தில் சட்டப்படி டெபாசிட் செய்யப்பட வில்லை என்பதை அமலாக்கத் துறை சரியாக நிரூபித்துள்ளது.

மேலும் அந்த பெரும் தொகை வியாபாரத்தின் மூலமாகத்தான் ஈட்டப்பட்டது என்பதற்கும் எந்த வொரு ஆதாரமோ, ஆவணமோ இல்லை. எனவே அந்நிய செலா வணி மோசடியில் ஈடுபட்ட குற்றத் துக்காக அமலாக்கத்துறை ரூ. 28 கோடி அபராதம் விதித்தது சரியான நடவடிக்கைதான் எனக்கூறி தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x