Published : 18 Jan 2017 09:17 AM
Last Updated : 18 Jan 2017 09:17 AM

அதிமுக அலுவலகத்தில் நூற்றாண்டு விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு சசிகலா மரியாதை

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த சசி கலாவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பி துரை, அமைப்புச் செயலாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அலுவலக நுழைவாயிலில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு மலரை சசிகலா வெளியிட, அவைத் தலை வர் இ.மதுசூதனன், அமைப்புச் செயலாளர் எம்.எஸ்.நிறைகுளத் தான் பெற்றுக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ‘கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்’ பதிப்பகம் வெளியிட்ட ‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.’ என்ற நூலை சசிகலா வெளியிட்டார். அதை சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக் கொண்டார். எம்.ஜி.ஆர். நூற் றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள சிறப்பு தபால் தலையை சசிகலாவிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங் கினார். ‘புரட்சித்தலைவி அம்மா நல அறக்கட்டளை’ சார்பில் திண் டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடு பட்டுள்ள பி.நடராஜனுக்கு ரூ.50 ஆயிரம், திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி மாணவிக்கு விடுதி கட்ட ணமாக ரூ.20 ஆயிரத்துக்கான காசோலைகளை சசிகலா வழங் கினார். பின்னர் அதிமுக அலுவலகத் துக்கு உள்ளே சென்ற சசிகலா அங்கு அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த 104 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடியே 4 லட்சம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பாண்டியராஜன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதய குமார், முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத் தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக எம்பிக்கள் கே.என்.ராமச்சந்திரன், மைத்ரேயன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x