Last Updated : 08 Jul, 2019 05:59 PM

 

Published : 08 Jul 2019 05:59 PM
Last Updated : 08 Jul 2019 05:59 PM

முதலில் பேட் செய்வது யாருக்கு சாதகம்? ஓல்டுடிராபோர்ட் ஒரு பார்வை: நாளை மழை வாய்ப்பா?

மிகப் பழமையான ஓல்டுடிராபோர்ட் மைதானத்தில்தான் நாளை இந்தியா, நியூஸிலாந்து இடையிலான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் நடக்கிறது.

இந்த மைதானத்தில் இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி இரு முறை மோதி,பாகிஸ்தானுக்கு எதிராகவும், மே.இதீவுகள் அணிக்கு எதிராகவும் இரு முறையும் வென்றுள்ளது.

இந்தியர்களுக்கு இந்த மைதானம் எப்போதும் ராசியானதாகவே இருந்து வந்துள்ளது. இந்திய அணி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை 1936-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது இந்திய அணியின் சயத் முஷ்டாக் அலி, விஜய் மெர்சன்ட் ஆகியோர் இங்கு சதம் அடித்துள்ளனர்.

1983-ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை இந்த மைதானத்தில் வைத்துதான் இந்திய அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

1. இதுவரை இந்த மைதானத்தில் 51 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் குறிப்பாக 1999-ம் ஆண்டு, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இங்கு தான் நடந்தது. இரண்டிலுமே இந்திய அணி வென்றது.

3. இந்த மைதானத்தில் இதுவரை டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிகள் 40 சதவீதம் மட்டுமே வென்றுள்ளன. ஆனால், சேஸிங் செய்த அணிகள் 60 சதவீதம் வென்றுள்ளன.

4. டாஸ் வென்ற ஒரு அணியின் வெற்றி சதவீதம் 42.22, டாஸ் வென்ற அணி தோல்வி சதவீதம் 57.78. ஆதலால், இந்திய அணி டாஸ் வெல்லக்கூடாது.

5. 46 போட்டிகளில் இதுவரை டாஸ் வென்ற அணிகள் 28 முறை முதலில் பேட்டிங் செய்துள்ளன. இதில் 10 முறை மட்டுமே வென்றுள்ளன. ஆனால், டாஸ் வென்று பீல்டிங் செய்த அணிகள் 9 முறை வென்றுள்ளன

6. இந்த உலகக்கோப்பை போட்டியில் இதுவரை ஓல்டுடிராபோர்ட் மைதானத்தில் 4 ஆட்டங்கள் நடந்துள்ளன. அனைத்து ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன.

7. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இந்த ஆட்டத்தில்தான் இங்கிலாந்து 397 ரன்கள் குவித்தது.

8. நியூஸிலாந்து மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான லீக் ஆட்டம் இங்குதான் நடந்தது. ரசிகர்கள் அனைவரையும் கட்டிப்போட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டத்தில் நியூஸிலாந்து வென்றது. பிராத்வெய்ட் சதம் அடித்துப் போராடி தோற்றார்.

9. இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டம் இங்குதான் நடந்தது. இதில் இந்திய அணி வென்றது.

மழைக்கு வாய்ப்பு?

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நாளை அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மான்செஸ்டரில் நாளை காலையில் லேசான சாரலும், வானம் மேகமூட்டமாகவும் இருக்கும் என்று இங்கிலாந்து வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காலையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், ஆட்டம் தாமதமாகத் தொடங்கவும் சாதகமான சூழல் காணப்படுகிறது. ஆனால், நண்பகல் 1 மணிக்கு மேல் வானம் தெளிவாகக் காணப்படும். நாளைய போட்டியில் டாஸ் வெல்வது முக்கியக் காரணியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x