Last Updated : 23 Jun, 2019 03:08 PM

 

Published : 23 Jun 2019 03:08 PM
Last Updated : 23 Jun 2019 03:08 PM

விராட் கோலிக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை? ஒழுங்கீனமாக நடந்ததால் அபராதம் விதித்து ஐசிசி அதிரடி

உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் நடுவரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அபாரதமும், ஒரு எச்சரிக்கைப் புள்ளியும் வழங்கி ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு வீரர் 24 மாதங்களில் 4 எச்சரிக்கைப் புள்ளிகளுக்கு மேல் எடுத்தால், அவரைத் தடை செய்யவோ, அல்லது சஸ்பெண்ட் செய்யவோ அதிகாரம் உண்டு. விராட் கோலிக்கு இது 2-வது எச்சரிக்கைப் புள்ளியாகும். 2 எச்சரிக்கைப் புள்ளி எடுத்தாலும் 2 ஒரு நாள் போட்டிகளுக்குத் தடை செய்யலாம். இதனால் கோலி மீது நடவடிக்கை பாயுமா என்பது தெரியவில்லை.

சவுத்தாம்டனில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 2-வது இன்னிங்ஸில் இந்தியா பந்துவீசியது. 29-வது ஓவரை  பும்ரா வீசினார். ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹ்மத் ஷா எதிர்கொண்டார். அப்போது பும்ரா வீசிய ஒரு பந்து ரஹ்மத் ஷா கால்காப்பில் பட்டது. அதற்கு இந்திய வீரர்கள் எல்பிடபிள்யு கேட்டு நடுவர் அலீம் தாரிடம் முறையிட்டனர்.

அப்போது, ஆவேசமாகச் சென்ற கேப்டன் கோலி, நடுவர் அலீம் தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் செயல் குறித்து நடுவர்கள் அலீம் தார், ரிச்சர் இல்லிங்வொர்த், 3-வது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ ஆகியோர் ஐசிசியிடம் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரையடுத்து, இந்திய அணியின் கேப்டன் கோலியை அழைத்து, ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட் விசாரணை நடத்தினார். அப்போது தான் செய்த தவறை கோலி ஒப்புக்கொண்டார். தண்டனையையும் ஏற்பதாக அறிவித்தார்.

இதையடுத்து ஐசிசியின் வீரர்களுக்கான ஒழுங்கு விதிமுறைகள் மீறி விராட் கோலி செயல்பட்டது உறுதியானதால், அவருக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து  25 சதவீதத்தை  அபராதமாகச் செலுத்த ஐசிசி போட்டி நடுவர் குழு உத்தரவிட்டது.

இதுபோன்று நடுவரிடம் வாக்குவாதம் செய்யும் வீரருக்கு அதிகபட்சமாக ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்க முடியும் அல்லது ஒன்று அல்லது 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்க முடியும். அந்த வகையில் கோலிக்கு ஊதியத்தில் இருந்து 25 சதவீத அபராதமும், ஒரு எச்சரிக்கைப் புள்ளியும் வழங்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த 2018-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட கோலிக்கு, அப்போது ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டது. இப்போது இது இரண்டாவது எச்சரிக்கைப் புள்ளியாகும்.

ஒரு வீரர் 24 மாதங்களில் 4 எச்சரிக்கைப் புள்ளிகளுக்கு மேல் எடுத்தால், அவரைத் தடை செய்யவோ அல்லது சஸ்பெண்ட் செய்யவோ அதிகாரம் உண்டு. விராட் கோலிக்கு இது 2-வது எச்சரிக்கைப் புள்ளியாகும்.

மேலும், இரு எச்சரிக்கைப் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட்  போட்டிக்கோ அல்லது 2 ஒருநாள் போட்டிகளுக்கோ அல்லது ஒரு டி20 போட்டிகளுக்கோ தடை விதிக்க முடியும். இதில் எது முதலில் வருகிறதோ அது பொருந்தும். அப்படிப் பார்த்தால், விராட் கோலிக்கு அடுத்து 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்தான். ஆனால் அதுகுறித்து ஐசிசி ஏதும் அறிவிக்கவில்லை.

இரு எச்சரிக்கைப் புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட்  போட்டிக்கோ அல்லது 2 ஒருநாள் போட்டிகளுக்கோ அல்லது ஒரு டி20 போட்டிகளுக்கோ தடை விதிக்க முடியும். இதில் எது முதலில் வருகிறதோ அது பொருந்தும். அப்படிப் பார்த்தால், விராட் கோலிக்கு அடுத்து 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்தான். ஆனால், அதுகுறித்து ஐசிசி ஏதும் அறிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x