Published : 04 Jun 2019 03:14 PM
Last Updated : 04 Jun 2019 03:14 PM

தினேஷ் கார்த்திக்கும் அட்டாக்கிங் கேப்டன் தான்... அந்தக் கடைசி பந்தை அவர்தான் ரவுண்ட் த விக்கெட்டில் வீசச் சொன்னார்: குல்தீப் யாதவ்

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக குல்தீப் யாதவ் விக்கெட் கைப்பற்றவில்லை, ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஹாட்ரிக் வாய்ப்பு பெற்றார் குல்தீப்.

 

இன்னும் 13 விக்கெட்டுகளை குல்தீப் கைப்பற்றினால் 100 ஒருநாள் விக்கெட்டுகளை விரைவுகதியில் கைப்பற்றிய 2வது வீரர் என்ற சாதனைக்குரியவர் ஆவார்.

 

இந்நிலையில் ஐபிஎல் முடிந்தவுடன் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் தன் பந்து வீச்சு எங்கு தவறாகச் சென்றது.. அது தன் மனநிலையை எப்படி பாதித்தது என்பது பற்றி கூறியுள்ளார்.

 

கடந்த முறை இங்கிலாந்தில் 3 ஒருநாள் போட்டியில்தான் ஆடினேன். இம்முறை உலகக்கோப்பையில் என் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. ஆனால் இது சவாலானது ஏனெனில் இது உலகக்கோப்பை கிரிக்கெட். எனக்கு பதற்றமான ஒரு உற்சாகம் உள்ளது.

 

அணியிலிருந்து நீக்கப்பட்டது (ஐபிஎல்) 2 நாட்களுக்கு வருத்தம் அளித்தது. ஆர்சிபி அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது. நான் மோசமாக வீசினேன் என்று கூற முடியாது, அதாவது நான் புல்டாஸ்கள், ஆஃப் வாலிக்களைக் கொடுக்கவில்லை. என் பலத்துக்குத்தான் வீசினேன். நான் பந்தை தூக்கி வீசினால் பேட்டுக்கு அது நன்றாக வந்தது. அதனால் அடிக்கப்பட்டேன்.

 

நான் மோசமாக வீசினேன் என்றார்கள் ஆனால் ஒரு ஓவரில் மட்டும்தான் 25 ரன்களை கொடுத்தேன். அதற்கு முன்னதாக என் சிக்கன விகிதம் 7.3 ரன்களாக இருந்தது, டி20யில் இது ஏற்றுக் கொள்ள கூடிய சிக்கன விகிதமே. (இந்தப் போட்டியில் மொயின் அலி இவரை பிய்த்து உதற 4 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்தார் குல்தீப்)

 

எனவே விக்கெட் எடுக்கவில்லை எனில் விமர்சனம் வரும்; விக்கெட் வீழ்த்தி விட்டால் பொதுவாக கண்டுகொள்ள மாட்டார்கள். இதனையடுத்து அணிச்சேர்க்கையில் மாற்றம் வேண்டுமென நிர்வாகமுக் கேப்டனும் (தினேஷ் கார்த்திக்) விரும்பினர் அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால் டி20யில் எப்போதும் சீராக ஒருவர் நன்றாக வீசி விட முடியாது என்பதே உண்மை.

 

மொயின் அலிக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீச வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டே இருந்தேனே தவிர செயல்படுத்தவில்லை. ஏனெனில் லெக் ஸ்டம்ப் பவுண்ட்ரி மிகவும் சிறியது 55 அடிதான், ஆகவே ஓவர் த விக்கெட் பயனளிக்கும் என்று கருதினேன். ஆனால் ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய போது அவர் ஆட்டமிழந்தார்.

 

இதனால்தான் ஏமாற்றமடைந்தேன், அடடா இதை முதலிலேயே செய்திருக்கலாம் என்று தோன்ற ஆரம்பித்த போது வருத்தம் அதிகரித்தது. ஓவரின் கடைசி பந்தின் போது கேப்டன் தினேஷ் கார்த்திக் என்னிடம் வந்து ரவுண்ட் த விக்கெட்டில் வீசச் சொன்னார். பலனளித்தது, ஏன் முதலிலேயே இந்த யோசனை எனக்கு மனதில் இருந்தும் செயல்படாமல் போனது என்பதுதான் ஏமாற்றம்.

 

தினேஷ் கார்த்திக் அட்டாக்கிங் கேப்டன் தான். ஆனால் இந்தப் போட்டியில் அட்டாக் செய்வதற்கான தருணம் ஏற்படவில்லை, ஏனெனில் புதிய பந்தில் சரியாக நாங்கள் வீசவில்லை. நான் வீச வரும்போதெல்லாம் விக்கெட்டுகள் அதிகம் விழுந்திருக்காத நிலையே இருந்தது. பிளாட் பிட்ச் என்பதால் பவர் ப்ளேயில் ஸ்பின்னரை கொண்டு வர முடியவில்லை, ஆனாலும் அட்டாக்கிங் பீல்ட் செட் செய்தால் நிச்சயம் அது உதவவே செய்யும்.

 

இவ்வாறு கூறினார் குல்தீப் யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x