Last Updated : 04 Jun, 2019 11:03 AM

 

Published : 04 Jun 2019 11:03 AM
Last Updated : 04 Jun 2019 11:03 AM

இந்திய அணி ரொம்ப பிஸி: உள்நாட்டில் விளையாடும் தொடர்களின் தேதிகள் அறிவிப்பு: சென்னையிலும் ஆட்டம் உண்டு

இந்திய கிரிக்கெட் அணி 2019-20ம் ஆண்டில் உள்நாட்டில் விளையாட உள்ள தொடர்கள், தேதிகள் குறித்த அறிவிப்பை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் இந்திய அணி நடப்பு ஆண்டில் 9 ஒருநாள் போட்டிகள், 5 டெஸ்ட் போட்டிகள், 12 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா

முதல்கட்டமாக இந்திய அணி தனது சீசனை தென் ஆப்பிரிக்கா அணியுடன் தொடங்குகிறது. செப்டம்பர் மாதம் இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியுடன் 3 டி20 போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

செப்டம்பர் 15-ம் தேதி முதல் டி20 போட்டி தர்மசலா நகரிலும், 2-வது டி20 போட்டி 18-ம் தேதி மொஹாலியிலும், 3-வது மற்றும் கடைசிப் போட்டி பெங்களூருவிலும் நடக்கிறது.

அதன்பின் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை விசாகப்பட்டிணத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 முதல் 14-ம் தேதிவரை ராஞ்சியிலும், 3-வது டெஸ்ட் போட்டி 19-ம் தேதிமுதல் 23 வரை புனேயிலும் நடக்கிறது.

வங்கதேசம் பயணம்

அதன்பின் வங்கதேசம் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் நவம்பர் 3-ம் தேதி டெல்லியில் இந்தியா, வங்கதேசம் இடையே முதல் டி20  போட்டி நடக்கிறது. 7-ம் தேதி ராஜ்கோட்டில் 2-வது டி20 போட்டியும், 10-ம் தேதி நாக்பூரில் 3-வது டி20 போட்டியும் நடக்கின்றன.

நவம்பர் 14 முதல் 18-ம் தேதிவரை இந்தூரில் முதல் டெஸ்ட் போட்டியும், கொல்கத்தாவில் நவம்பர் 22 முதல் 26-ம் தேதிவரை 2-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.

டிசம்பரில் இந்தியா வரும் மே.இ.தீவுகள்

டிசம்பர் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறது. இந்தியாவுடன் 3 டி20 போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியுடன் மே.இ.தீவுகள் அணி விளையாடுகிறது.

இதில் முதல் டி20 போட்டி மும்பையில் டிசம்பர் 6-ம் தேதி நடக்கிறது. 8-ம் தேதி திருவனந்தபுரத்தில் 2-வது டி20 போட்டியும், 11-ம் தேதி ஹைதராபாத்தில் 3-வது போட்டியும் நடக்கிறது.

சென்னையில் போட்டி

ஒருநாள் போட்டித் தொடர் டிசம்பர் 15-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 15-ம் தேதி சென்னையில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா, மே.இ.தீவுகள் அணிகள் மோதுகின்றன. 2-வது போட்டி விசாகப்பட்டிணத்தில் டிசம்பர் 18-ம் தேதியும், 3-வது போட்டி 22-ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது.

18ஆண்டுகளுக்குப்பின் ஜிம்பாப்வே வருகை

அதன்பின் 2020ம் ஆண்டு  ஜனவரிமாதம் ஜிம்பாப்பே அணி இந்தியாவுக்கு வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டுக்குப்பின் இந்தியாவுக்கு ஜிம்பாப்பே அணி ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குபிப்பின் விளையாட வருகிறது.

இந்திய அணியுன் 3 டி20 போட்டிகளில் ஜிம்பாப்வே அணி பங்கேற்கிறது. இதில் முதல் டி20  ஆட்டம் 2020-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி கவுஹாத்தியில் நடக்கிறது. 2வது டி20 போட்டி 7-ம்தேதி இந்தூரிலும் 10-ம் தேதி புனேயிலும் 3-வது டி20 போட்டியும் நடக்கின்றன.

ஆஸி. அணியுடன் போட்டிகள்

ஜிம்பாப்பே அணி சென்றபின் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் நடக்கின்றன. முதல் ஒருநாள் போட்டி 2020-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி மும்பையில் நடக்கிறது. 2-வது ஒருநாள் ஆட்டம் 17-ம் தேதி ராஜ்கோட்டிலும், 19-ம் தேதி பெங்களூரில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் ஆட்டம் நடக்கிறது.

மீண்டும் தெ.ஆப்பிரிக்கா

அதன்பின் 2020ம் ஆண்டு மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு வருகிறது. மார்ச் மாதம் இந்தியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் மார்ச் 12-ம் தேதி தர்மசலாவில் இரு அணிகளுக்கு இடையே நடக்கிறது. 2-வது ஒருநாள் ஆட்டம் மார்ச் 15-ம் தேதி லக்னோ நகரிலும், 18-ம் தேதி கடைசி மற்றும் 3-வது ஒருநாள் ஆட்டம் கொல்கத்தாவிலும் நடக்கிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x