Last Updated : 03 Jun, 2019 03:41 PM

 

Published : 03 Jun 2019 03:41 PM
Last Updated : 03 Jun 2019 03:41 PM

கிரிக்கெட் பொதுவானது- கோலி | கோலியைப் போல் விளையாடவே பாக் வீரர்கள் விரும்புகிறார்கள்: யூனுஸ்கான் புகழாரம்

விராட் கோலியை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல பாகிஸ்தான் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் யூனுஸ்கான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா டுடே சார்பில் லண்டனில் சலாம் கிரிக்கெட் 2019 என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் முன்னாள் வீரர் யூனுஸ்கான், சச்சின், ஹர்பஜன் சிங், ஷேன் வார்ன், மைக்கேல் கிளார்க், சுனில் கவாஸ்கர், மிஸ்பா உல்ஹக், விவியன் ரிச்சார்ட்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.

கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் மோதிக்கொண்டாலும், இரு தரப்பு வீரர்களுக்கு இடையிலான உறவில் வித்தியாசம் ஏதும் இல்லை.

பாகிஸ்தான் அணியின் நடுவரிசையின் முதுகெலும்பாக இருந்த முன்னாள் கேப்டன் யூனிஸ்கான் இந்த நிகழ்ச்சியில் கூறியதாவது:

''விராட் கோலியை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல பாகிஸ்தானில் உள்ளிட்ட அனைத்து நாட்டு ரசிகர்களும் விரும்புகிறார்கள். குறிப்பாக பாகிஸ்தானில் விராட் கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விராட் கோலியைப் போன்று உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும், விளையாட வேண்டும் என பாகிஸ்தான் வீரர்களும் விரும்புகிறார்கள்.

ஆசியக் கோப்பை போட்டியில் விராட் கோலி விளையாடாமல் இருந்தபோது, மைதானத்தில் உள்ள இருக்கைகள் காலியாக இருந்தன. உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் துருப்புச்சீட்டு விராட் கோலி " எனத் தெரிவித்தார்.

அப்போது பேசிய விவியன் ரிச்சார்ட்ஸ், "பல நேரங்களில் விராட் கோலியின் ஆவேசம் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு, அகங்காரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுபோன்ற வீரர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் விராட் கோலியின் அகங்காரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். இது அவரின் தன்னம்பிக்கை" எனத் தெரிவித்தார்

விராட் கோலி பேசுகையில், "என்னைப் பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. இதைத் தொடர்ந்து கூறிவருகிறேன். நீங்கள் வீரர்களிடம் போட்டி குறித்துக் கேட்டால், ரசிகர்கள் சிந்திப்பதைக் காட்டிலும் வித்தியாசமாகப் பேசுவார்கள். மைதானத்துக்குள் நுழையும் போதே எதிர்பார்ப்பும், உற்சாகமும் தொற்றிக்கொள்ளும். ஆனால், நுழைந்தவுடன் தொழில்முறையாக விளையாட்டு அமைந்துவிடும்.

மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் விளையாடும்போது, இருக்கும் அழுத்தம் வித்தியாசமானது. ஆனால், மைதானத்தில் கிரிக்கெட் அனைவருக்கும் பொதுமானது. இதைத்தான் மீண்டும் மீண்டும்சொல்கிறோம். கிரிக்கெட் அனைவருக்கும் பொதுவானது. அதுதான் உண்மை.

உலகக்கோப்பை போட்டியில் முதல் 4 அல்லது 5 போட்டிகள் சாதாரணமாகச் செல்லும். ஆனால் அதன்பின், புள்ளிகளுக்கு ஏற்றார்போல் விளையாட வேண்டியது இருக்கும். எந்த அணியையும் நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அனைத்து அணிகளும் யாரை வேண்டுமானாலும் வீழ்த்தும் திறமை கொண்டவை. அதனால்தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கிறது. நல்ல கிரிக்கெட் விளையாடினால் நல்ல இடத்தில் இருக்கலாம்" என்று கோலி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x