Last Updated : 02 Jun, 2019 01:56 PM

 

Published : 02 Jun 2019 01:56 PM
Last Updated : 02 Jun 2019 01:56 PM

6-வது முறையாக ஐரோப்பியன் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது லிவர்பூல் அணி: முகமது சலா அபாரம்

ஐரோப்பியன் லீக் கால்பந்து ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை 6-வது முறையாக லிவர்பூல் அணி கைப்பற்றியது.

மாட்ரிட் நகரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில், முகமது சலாவின் தொடக்க கோல், ஓரிகியின் கடைசி நிமிட கோல் ஆகியவற்றால், டோட்டன்ஹம் ஹட்ஸ்பர் அணியை 2-0 என்றகோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது லிவர்பூல் அணி.

லிவர்பூல் அணிக்கு பயிற்சியாளராக  பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்குப்பின் இந்த பட்டத்தை ஜெர்ஜன் கிளாப் தலைமையில் லிவர்பூல் வென்றுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டுக்குப்பின் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுகிறது. ஏறக்குறைய 14ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் லிவர்பூல் சாம்பியனாகியுள்ளது. இதற்கு முன் கடந்த 1977, 1978, 1981, 1984, மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டங்களை லிவர்பூல் வென்றுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டுக்குப்பின் ஐரோப்பியன் சாம்பின் லீக் போட்டியில் ஸ்பெயின், இத்தாலி அணிகளின் ராஜ்ஜியம் மட்டுமே இருந்து வந்தநிலையில் இப்போது மீண்டும் இங்கிலாந்தின் லிவர்பூல் வசம் சென்றுள்ளது. கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து இதுவரை பார்சிலோனா அணி 4 முறையும், ரியல்மாட்ரிட் 4 முறையும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

மாட்ரிட் நகரில் உள்ள வாண்டா மெட்ரோபொலிட்டானா அரங்கில் நேற்று நடந்த ஆட்டத்தைக் காண அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருந்தனர். காயத்தில் இருந்து மீண்டு வந்த ஹேரி கேன் ஹட்ஸ்பர் அணியையும், ரோபர்டோ பர்மிங்கோ, லிவர்பூல் அணியையும் வழிநடத்தினார்கள்.

கடந்த ஆண்டு ஐரோப்பியன் சாம்பியன்லீக் இறுதி ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியிடம் அடைந்த தோல்வியில் லிவர்பூல் அணி நன்கு பாடம் கற்றிருந்தது. அதனால், நேற்று ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே கோல் கணக்கை தொடங்கியது.

2-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிகிக் வாய்ப்பில் லிவர்பூல் வீரர் சேடியோ மானே அடிக்க, அதை  ஸ்பர் வீர்ர் மூசா சிகோ தடுத்துக் கொடுத்தார். வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நட்சத்திர வீரர் முகமது சலா அதை அருமையாக கோலாக்கி அணியை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார்.

அதன்பின் கோல் கணக்கை நேர் செய்ய ஹட்ஸ்பர் அணி முயன்றும் அனைத்து வாய்ப்புகளையும் லிவர்பூல் வீரர்கள் முறியடித்தனர். இதனால் முதல்பாதியில் 1-0 என்ற கணக்கில் லிவர்பூல் அணி முன்னிலை பெற்றிருந்தது.

2-வது பாதியிலும் கோல் அடிக்க லிவர்பூல் அணியுடன் ஸ்பர் வீரர்கள் கடுமையாக மோதினார்கள். 58-வது நிமிடத்தில் ஸ்பர் வீரர் ஹெங் மின் பந்தை கடத்திச் சென்று கோல் அடிக்க முயன்றும் அது கடைசியில் கோலாகவில்லை.

இதையடுத்து, ஸபர் அணியில் 66-வது நிமிடத்தில் ஹேரி விங்ஸ்க்கு  பதிலாக, அரையிறுதியில் ஹீரோவாக வலம்வந்த  லூகாஸ் மோராவை களமிறக்கினார்கள். 74-வது நிமிடத்தில் மூசா சிகோவுக்கு பதிலாக எரிக் டயர் களமிறங்கினார். இரு மாற்றங்களை செய்யும் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் பெல்ஜியத்தைச் சேர்ந்த லிவர்பூல் வீரர் டிவோக் ஓரிகி அணிக்காக 2-வது கோலை அடித்தார். அதன்பின் ஆட்டம் முடிவுவரை டோட்டன்ஹம் அணியால்கோல் அடிக்க முடியவில்லை.  இதனால் 2-0 என்ற கணக்கில் லிவர்பூல் அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x