Published : 25 May 2019 05:07 PM
Last Updated : 25 May 2019 05:07 PM

‘கவர் ட்ரைவ் இப்படி ஆடு, ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் இம்ப்ரூவ் பண்ணு...’ - ரசிகர்கள் தொல்லைத் தாங்கவில்லை: ரோஹித் சர்மா பேட்டி

கிரிக்கெட் வீரர்கள் பிரபலமடையும் போது உள்ள ஒரு மகிழ்ச்சித் தொல்லை என்னவெனில் போகுமிடங்களிலெல்லாம் ரசிகர்கள் பலர் பல ஆலோசனைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

 

அதுவும் இப்போது ட்விட்டர், ஃபேஸ்புக் , வாட்ஸ் அப் என்று சமூகவலைத்தள காலம் என்பதால் ரசிகர்கள் பலரும் வந்து கருத்து சொல்வது என்பது பிரபல விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் அன்றாடமாகும்.

 

இந்நிலையில் ரோஹித் சர்மா ஆங்கில கிரிக்கெட் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

 

ரசிகர்கள் கருத்துக்கு ஒவ்வொரு நாளும் செவிமடுப்பது, பவ்யமாக அணுகுவது என்பது எனக்கு இப்போது பழக்கமாகிவிட்டது, இவற்றுடன் வாழப் பழகிக்கொண்டு விட்டேன்.

 

விட்டை விட்டு வெளியே வந்தால் போதும் முதலில் ஹலோவில் தான் ஆரம்பிக்கும் பிறகு அவர் கவர் டிரைவை நீங்கள் கொஞ்சம் இப்படி ஆடலாம், நேர் ட்ரைவை இன்னும் கொஞ்சம் நீங்கள் மேம்படுத்த வேண்டும்  என்பார்கள், நான் என்ன செய்வேன் கேட்டுக் கொண்டு நகர்வேன்.

 

ஒரு நபர்.. அவர் யாரென்றே தெரியாது புல்ஷாட் பற்றி லெக்சர் கொடுத்தாரே பார்க்க வேண்டும், அதை காற்றில் ஆடாதே என்கிறார்.  இந்த ஷாட்களை வைத்துத்தான் அவர்கள் என்னைப் பார்க்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. நான் ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் என்னால் ரன்களை எடுக்க முடியாது.

 

சமீபத்தில் ஒருவர் என்னிடம் வந்து நான் 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு 130 சிக்சர்கள் அடித்துள்ளேன் என்றார் எனக்கு அடுத்தபடியாக 55 சிக்ஸ்தான் 2வது வீரர் என்றார்( (அது விராட் கோலி). இடைவெளி 75 சிக்சர்கள்தான் அதுதான் நான் எடுக்கும் ரிஸ்குகளின் அளவு.

 

இவ்வாறு கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x