Last Updated : 19 May, 2019 05:17 PM

 

Published : 19 May 2019 05:17 PM
Last Updated : 19 May 2019 05:17 PM

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் யுவராஜ் சிங்?

இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், இடதுகை பேட்ஸ்மேனுமான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பிசிசிஐ அமைப்பிடம் பேசி வருவதாகவும், பிசிசிஐ ஒப்புதலோடு வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகலில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், " முதல் தர கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக விரைவில் பிசிசிஐ அமைப்பிடம் பேசி முடிவு செய்ய உள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடரில் பங்கேற்க யுவராஜ் சிங் ஆர்வமாக இருக்கிறார். கனடாவில் நடக்கும் ஜிடி20 போட்டி, அயர்லாந்து, ஹாலந்து, கரீபியன் ஆகிய நாடுகளில் நடக்கும் டி20போட்டிகளில்விளையாட விருப்பமாக இருப்பதால், பிசிசிஐ அனுமதியைக் கோருகிறார்.

மிகச்சிறந்த வீரர், மேட்ச் வின்னரான யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்தார். கடைசியாக இந்திய அணியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக யுவராஜ் சிங் பங்கேற்றார்.  அதன்பின் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். ஐபிஎல் போட்டியிலும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த யுவராஜ் சிங் அந்த அணியில் இருந்தும் கழற்றிவிடப்பட்டு இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். சில போட்டிகள் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அதன்பின் ஓரம்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ அனுமதி அளித்தால், அவர் ஓய்வுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார். கரீபியன் லீக் தொடரின் வரைவு பட்டியலில் இருந்து இர்பான் பதான் தனது பெயரை நீக்கிவிட்டார். யுவராஜ் சிங்கைப் பொருத்தவரை நாங்கள் விதிகளை ஆய்வு செய்ய வேண்டும். முதல்தரப் போட்டிகளில் இருந்து யுவராஜ் சிங் ஓய்வு பெற்றாலும்கூட, பிசிசிஐ பதிவு பெற்ற டி20 விளையாட்டு வீரராகத்தான் யுவராஜ் சிங் இருந்து வருகிறார்" எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான் கரீபியன் லீக் போட்டியில் வரைவு பட்டியலில் இடம் பிடித்தார். விரைவில் அந்த தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பதான் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ ஒருவேளை சம்மதம் அளித்தால் கனடா லீக்கில் விளையாடுவார் எனத் தெரிகிறது.

இதுவரை யுவராஜ் சிங்  40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 1900 ரன்கள் சேர்த்துள்ளார். 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதம், 52 அரைசதங்கள் உள்பட 8701 ரன்கள் குவித்துள்ளார். 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x