Published : 19 May 2019 12:45 PM
Last Updated : 19 May 2019 12:45 PM

அசுர பலமாகும் மே.இ.தீவுகள்: ஐபிஎல் நட்சத்திர வீரர்கள் இருவர் சேர்ப்பு?

இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைப் போட்டிக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணியில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஐபிஎல் போட்டியில் கலக்கிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் சேர்க்கப்படும்பட்சத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கக் கூடிய அணியா ஜேஸன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியதீதவுகள்அணி இருக்கிறது. அதிர்ச்சித் தோல்வி அடைவதும், எதிர்பாராத நேரத்தில் எதிரணிகளை படுதோல்வி அடையச் செய்வதும் அந்த அணியின் சிறப்பம்சமாகும். கடந்த சில மாதங்களாக சிறப்பாகச் செயல்பட்டும் அந்த அணியில் ஐபிஎல் போட்டியின் நட்சத்திர வீரர்களாக வலம் வந்த கிறிஸ் கெயில், ஆன்ட்ரூ ரஸல் ஆகியோர் உலகக் கோப்பைக்கான அணியில்  சேர்க்கப்பட்டிருந்தனர்.

உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணியையும் மேற்கிந்தியத்தீவுகள் அறிவித்தது. இந்நிலையில், அதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கலக்கிய கெய்ரன் பொலார்ட் சேர்க்கப்பட உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டிவைன் பிராவோவையும் சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், ஐசிசியிடம் அனுமதி பெறாமல் வீரர்கள் பட்டியலை வரும் 22-ம் தேதிவரை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், அந்நாட்டு வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த இரு வீரர்களும் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், உலகக்கோப்பைப் போட்டியில் காயம் அடையும் வீரர்களுக்கு மாற்று வீரர்களாக 10 பேர் கொண்ட பட்டியலை மேற்கிந்தியத்தீவுகள் வாரியம் தயாரித்துள்ளது. அதில் கெய்ரன் பொலார்ட், டிவைன் பிராவோ, சுனில் அம்பரிஸ் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

ஏற்கனவே அதிரடியான பேட்ஸ்மேன்கள் மேற்கிந்தியத்தீவுகளில் இருக்கும் நிலையில், பொலார்ட் சேரும் போது மேலும் அசுரபலத்தைப் பெறும். ஆன்ட்ரூ ரஸல், இவின் லூயிஸ், கிறிஸ்கெயில், ஷாய் ஹோப் என நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

அதேசமயம், காயம் முழுமையாக குணமடையததால், சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் இடம் பெறவில்லை. மேற்கிந்தியத்தீவுகள் அறிவித்துள்ள 10 பேர் கொண்ட ரிசர்வ் வீரர்கள் பட்டியல்:

சுனில் அம்பரிஸ், டிவைன் பிராவோ, ஜான் கேம்பெல், ஜோனாத்தன் கேர்டர், ரஸ்டன் சேஸ், கீமோ பால், ஹாரி பியர், ரேமன் ரீபர், கெய்ரன் பொலார்ட்.

இதில் பொலார்ட், டிவைன் பிராவோ ஆகிய  இருவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். இதில் வலதுகை பேட்ஸ்மேனான அம்பரிஸ் சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். கடந்த 4 ஒருநாள்போட்டியில் ஒருசதம் , அரைசதம் அடித்துள்ளார் அம்பரிஸ்.

உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி விவரம்:

ஜேஸன் ஹோல்டர்(கேப்டன்), கிறிஸ் கெயில்(துணைக் கேப்டன்) ஆன்ட்ரூ ரஸல், ஆஷ்லே நர்ஸ், கார்லோஸ் பிராத்வெய்ட், நிகோலஸ் பூரன், டேரன் பிராவோ, எவின் லூயிஸ்,ஃபேயின் ஆலன், கீமர் ரோச், ஓஸ்னே தாமஸ், ஷாய் ஹோப், ஷானன் கேப்ரியல், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரன் ஹெட்மயர்
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x