Published : 15 May 2019 04:00 PM
Last Updated : 15 May 2019 04:00 PM

1987-ல் 5 போட்டிகளைத் தோற்று வந்தோம் ஆனால் உலகக்கோப்பையை வென்றோம்: 2019 வாய்ப்புகள் பற்றி டீன் ஜோன்ஸ்

1987ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த போது ஆலன் பார்டர் அந்த அணியை தன் தலைமையில் நிமிர்த்தி உலகக்கோப்பையை வென்று உத்வேகம் ஏற்படுத்தினார், அந்த அணியில் இருந்தவர் டீன் ஜோன்ஸ்.  டீன் ஜோன்ஸ் ஒரு அருமையான 3ம் நிலை வீரர், அபாரமான பீல்டர்.  ஸ்டைலிஷ் பேட்ஸ்மெனும் கூட.

 

இந்நிலையில் சியட் விருதுகளுக்கு இடையே தி இந்து (ஆங்கிலம்) நாளிதழிடம் பேசிய டீன் ஜோன்ஸ் உலகக்கோப்பை பற்றி விரிவாக அலசினார்.

 

இந்த முறை டி20 போட்டிகளின் தாக்கம் உலகக்கோப்பையில் பயங்கரமாக இருக்கும் எல்லா அணிகளும் 30 ஓவர்கள் வரை நிதானித்து விக்கெட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு கடைசி 20 ஓவர்களில் டி20 போட்டிகள் போல் ஆடும், இது ஆட்டத்துக்கு நல்லதா...நல்லதுதான்.

 

“இங்கிலாந்துக்குத்தான் அதிக வாய்ப்பு”

 

2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்குத்தான் அதிக வாய்ப்பு என்று அந்த பேட்டியில் கூறிய டீன் ஜோன்ஸ், இங்கிலாந்து தங்கள் சொந்த மண்ணில் கடைசி 9 ஒருநாள் தொடர்களில் 8 தொடர்களை வென்றுள்ளது. எதிரணியினரை பயமுறுத்தும்  விதமான ஒரு பேட்டிங் உத்தி, அந்த அணியின் டாப்  வீரர்கள் ஜேசன் ராய், பேர்ஸ்டோ, பட்லர், ரூட், மோர்கன், பென் ஸ்டோக்ஸ் என்று காட்டடி மாஸ்டர்கள் அதிகம் உள்ளனர் என்றார். ஆகவே மற்ற அணிகளைக் காட்டிலும் கோப்பையை வெல்வதில் இங்கிலாந்து கொஞ்சம் வேறு உயரத்தில் உள்ளது.

 

உலகக்கோப்பை கால்பந்து 32 அணிகளுடன் ஒரு மாதகாலத்தில் முடிந்து விடுகிறது, ஆனால் 10 அணிகளை வைத்துக் கொண்டு 50 நாட்கள் நடத்தினால் அனைவருக்கும் சோர்வே மிஞ்சும். ஆகவே 8 அணிகள் போதும், தரம்தான் முக்கியம் எண்ணிக்கை அல்ல என்றார்.

 

 இந்தியா தொடரை 3-2 என்றும் பாகிஸ்தான் தொடரை 5-0 என்றும் ஆஸ்திரேலியா வென்றுள்ளதே என்று கேட்ட போது டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை வாய்ப்புகள் பற்றி “ஆஸி. அணி டாப் 2-3 இடங்களில் இல்லை. ஆஸ்திரேலிய அணியின் பக்கம் உத்வேகம் சாய்ந்தால் ஏதாவது நடக்கலாம். உலகக்கோப்பை 1987-க்கு நாங்கள் வருவதற்கு முன்பாக 5 போட்டிகளில் தோற்றுவிட்டுத்தான் வந்தோம். நம் ரோல் என்ன அதை எப்படி செய்யப்போகிறோம் என்பதைப் பொறுத்தே ஆஸி.க்கு வாய்ப்பு. 1987-ல் சிங்கிள்கள் எடுத்தே உலகக்கோப்பையை வென்றோம், என்றார் டீன் ஜோன்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x