Published : 25 Apr 2019 04:01 PM
Last Updated : 25 Apr 2019 04:01 PM

‘சென்ட் ஆஃப்’ கொடுத்து சீண்டிய விராட் கோலி: பதிலடி கொடுத்த அஸ்வின்

விராட் கோலி என்றாலே ‘பாடி லேங்குவேஜ்’ என்று பெயர் எடுத்துள்ளார் அதுவும் கேமராக்கள் அவரையே கவனிக்கிறது என்றால் அவரது ‘ஆட்டம்’ கொஞ்சம் அதீதமாகவே இருக்கும்.

 

சமீப காலங்களாக பேட்ஸ்மென் சிக்ஸர் அடிப்பார், பவுலர் ஏமாற்றமடைவார், அப்போதும் விராட் கோலியை கேமராவில் காட்டுவது.. பேட்ஸ்மென் ரன் ஓடினால் விராட் கோலியை காட்டுவது.. இன்னும் கொஞ்சம் போனால் வேறு எங்காவது ஏதாவது போட்டி நடந்தால் கூட டெலிவிஷனில் விராட் கோலியைக் காட்டுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவுக்கு அவரது ‘அசிங்கமான’ பாடி லேங்குவேஜ் உலகப்புகழ்பெற்றுவிட்டது. நிற்க.

 

நேற்றைய ஆர்சிபி, கிங்ஸ் லெவன் போட்டியில் 203 ரன்களை கிங்ஸ் லெவன் விரட்டிய போது கடைசி ஓவரில் 27 ரன்கள் வெற்றிக்குத் தேவை. உமேஷ் யாதவ் வீச தன் முதல் பந்தில் அஸ்வின் பெரிய சிக்சரை அடித்தார். அடுத்த பந்தையும் சிக்சர் அடிக்கும் முயற்சியில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார்.

 

கேட்சைப் பிடித்த கோலி  தன் வலது கையை அசிங்கமாக ஆட்டி அஸ்வினுக்கு சென்ட் ஆஃப் கொடுத்தார். அதாவது அவர் கையை ஆட்டிய விதம் ‘நீ என்ன கிழித்து விட முடியுமா?’ என்பது போல் அமைந்தது.

 

அஸ்வின் ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும் போது  தன் தொப்பியையும் கிளவுஸையும் வழக்கத்துக்கு விரோதமாக ஆவேசமாகத் தூக்கி எறிந்து பதிலடி கொடுத்தார்.

 

இந்த இரண்டு விஷயங்கள் பற்றி அஸ்வினிடம் பிற்பாடு கேட்ட போது,

 

“நானும் கிரிக்கெட் மீதான தீரா உணர்வுடன் ஆடுகிறேன், அவரைப்போலவே” என்றார்.

 

தொலைக்காட்சி கேமராக்கள் இருப்பது, மைதானத்தில் ரசிகர்கள் காட்டும் உத்வேகம் இவையெல்லாம் எந்த ஒரு தரமான வீரரின் நடத்தையையும் மோசமானதாக மாற்றி விடக்கூடியது, வீரர்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது அவசியம், ஒரு பெரிய கிரிக்கெட் நாட்டின் கேப்டன் விராட் கோலி சக வீரர்  அஸ்வின் அவுட் ஆகிச் செல்லும் போது அசிங்கமாக கையை ஆட்டுவது அவரது நிலைக்கு அழகானதல்ல.

 

ஆனால் இது போன்ற அசிங்கமான நடத்தைகளை கிரிக்கெட் ஆட்டத்தை தாங்கள் ஏதோ பற்றுதலுடன் ஆடுவதாகக் கூறிக்கொள்வதும் தவறான வழிகாட்டுதலுக்கே கொண்டு செல்லும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x